Saturday, April 20, 2024

tamilnadu local body elections

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்த மேலும் 6 மாத கால அவகாசம் – உச்சநீதிமன்றம் உத்தரவு!!

தமிழகத்திற்கு உள்ளாட்சி தேர்தலை நடத்த மேலும் 6 மாதங்கள் அவகாசம் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மாநில தேர்தல் ஆணையத்தின் கோரிக்கையினை ஏற்று இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உள்ளாட்சி தேர்தல்: தமிழகத்தில் உள்ள 27 மாவட்டங்களுக்கு தற்போது வரை கிராமப்புற ஊரக தேர்தல் மட்டுமே நடத்தப்பட்டுள்ளது. ஆனால், மாநில தேர்தல் ஆணையம் சார்பாக மாநகராட்சி...

வரலாறு படைத்த திமுக – தமிழக உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள்

தமிழகத்தைப் பொறுத்தவரை, உள்ளாட்சித் தேர்தல் ஆக இருந்தாலும் சரி இடைத்தேர்தல் ஆக இருந்தாலும் சரி ஆளுங்கட்சி வெற்றி பெறுவதே வழக்கமான ஒன்றாக இருந்து வந்தது.  இதனை திமுக இரண்டாவது முறையாக தகர்த்தெறிந்து வரலாறு படைத்துள்ளது.  ஆளுங்கட்சியான அதிமுக இரண்டாவது முறையாக எதிர்க்கட்சியான திமுக விடம் தோல்வி அடைந்துள்ளது. அதிமுக பின்னடைவு: தமிழகத்தில் சென்ற வருடம் நடந்த சட்டசபை இடைத்தேர்தல் முடிவுகளும் அதிமுக விற்கு பெரும் பின்னடைவாகவே அமைந்தது.  மொத்தம் 22 தொகுதிகளுக்கு நடந்த சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக பெருவாரியான இடங்களில் வெற்றி பெற்று ஆளும் கட்சியான அதிமுக விற்கும் அதன் தொண்டர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை அளித்தது.  இது அதிமுக வினர் மத்தியில் பெரும் மனசோர்வினை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து இரண்டாவது முறை: தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல்கள் மாநில தேர்தல் ஆணையம் எனும் சுயேச்சை அமைப்பின் மூலமே நடத்தப்படுகிறது.  இந்த அமைப்பானது 1996 முதல் செயல்பட்டு வருகிறது.  தற்போது நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலிலும் திமுக இரண்டாவது முறையாக பெருவாரியான இடங்களை கைப்பற்றி புதிய சாதனை படைத்துள்ளது. எம்ஜிஆரை தோற்கடித்த கருணாநிதி: 1986ம் ஆண்டு தமிழகத்தின் முதல்வராக எம்ஜிஆர் ஆட்சியில் இருந்த போது உள்ளாட்சி தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது.  அப்போது 97 நகராட்சிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் திமுக மொத்தம் 64 இடங்களை கைப்பற்றி அதிமுக விற்கு அதிர்ச்சி அளித்தது.  அதில் 58 இடங்களில் போட்டியிட்ட அதிமுக 11 இடங்களை மட்டுமே கைப்பற்றியது. மீண்டும் வரலாறு படைத்த திமுக: அதிமுக விடம் அதிகார பலம், அமைச்சர்கள் என அனைத்தும் கைகளில் இருந்தும் வெற்றியை கைப்பற்ற முடியவில்லை.  இது அதிமுக ஆட்சியின் மீது மக்களுக்கு ஏற்பட்ட அதிருப்தியை காட்டுகிறது.  அதிமுக...

ஊராட்சி மன்றத் தலைவராக கல்லூரி மாணவி தேர்வு

தமிழ்நாடு முழுவதும் 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கு தேர்தல் நடந்தது. இம்மாவட்டங்களில் 515 மாவட்ட ஊராட்சி கவுன்சிலர்கள்; 314 ஊராட்சி ஒன்றியங்களில் 5,090 ஒன்றிய கவுன்சிலர்கள்; 9,624 கிராம ஊராட்சி தலைவர்கள்; 76 ஆயிரத்து 746 கிராம ஊராட்சி கவுன்சிலர்கள் பதவி என மொத்தம் 91 ஆயிரத்து 975 பதவிகளுக்கு டிச. 27,...

பீனிக்ஸ் பறவையாக உயிர்த்தெழுந்தது – தேமுதிக

தமிழக அரசியல் களத்தில் காணாமல் போய்விட்டதாக கருதப்பட்ட தேமுதிக தற்போது நடந்த உள்ளாட்சித் தேர்தலில் தமது செல்வாக்கை நிரூபித்திள்ளது.  மொத்தம் 82 இடங்களில் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவியை கைப்பற்றி தனது இருப்பை பதிவு செய்தது. ஆரம்ப காலத்தில் கூட்டணி அமைத்து விஸ்வரூப வெற்றி பெற்று எதிர்கட்சியாக இருந்த தேமுதிக பின்னர் ஏற்பட்ட குழப்பங்கள் காரணமாக பெரும் பின்னடைவை சந்தித்தது.  அக்கட்சியின் பொதுச்செயலாளர் விஜயகாந்த் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டதும் ஒரு காரணமாக கூறப்பட்டது. இதனால் தமிழக தேர்தல் களத்தில் தேமுதிக காணாமல் போய்விட்டதாகவே கருதப்பட்டது. ஆனால் தற்போது நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் ஓட்டு எண்ணிக்கை பல இடங்களில் முடிவடைந்துள்ளளது.  தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அதிகார அறிவிப்பின் படி தேமுதிக மொத்தம் 82 இடங்களில் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. கடந்த 2011-ம் ஆண்டு உள்ளாட்சி தேர்தல்களில் 330 ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்களை தேமுதிக பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் தற்போது திமுக, அதிமுகவை தொடர்ந்து காங்கிரஸ் 88 இடங்களைப் பெற்ற நிலையில் தேமுதிக 4-வது இடத்தை பெற்றிருக்கிறது. மாவட்ட கவுன்சிலர் பதவிகளில் 2 இடங்களில் தேமுதிக வென்றுள்ளது. 

தமிழ்நாடு ஊரக உள்ளாட்சி தேர்தல் ஓட்டு எண்ணிக்கை

தமிழ்நாடு முழுவதும் 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கு தேர்தல் நடந்தது. இம்மாவட்டங்களில் 515 மாவட்ட ஊராட்சி கவுன்சிலர்கள்; 314 ஊராட்சி ஒன்றியங்களில் 5,090 ஒன்றிய கவுன்சிலர்கள்; 9,624 கிராம ஊராட்சி தலைவர்கள்; 76 ஆயிரத்து 746 கிராம ஊராட்சி கவுன்சிலர்கள் பதவி என மொத்தம் 91 ஆயிரத்து 975 பதவிகளுக்கு டிச. 27, 30ம் தேதிகளில் இரண்டு கட்டமாக தேர்தல் நடந்தது. முதல் கட்ட தேர்தலில் 76.19 சதவீதம், இரண்டாம் கட்ட தேர்தலில் 77.73 சதவீதம் ஓட்டுகள் பதிவாகின.  அனைத்து வாக்காளர்களும் ஊராட்சி கவுன்சிலர்,  ஊராட்சி தலைவர், ஒன்றிய கவுன்சிலர், மாவட்ட கவுன்சிலர் ஆகியோரை தேர்வு செய்ய நான்கு ஓட்டுகளை பதிவு செய்தனர்.  கன்னியாகுமரி மாவட்டம் மேல்புறம் ஊராட்சி ஒன்றியத்தில் மட்டும் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பயன் படுத்தப்பட்டன. மற்ற பகுதிகளில் நான்கு வண்ண ஓட்டுச் சீட்டுகள் பயன் படுத்தப்பட்டன.ஓட்டுப் பெட்டிகள்  'சீல்'  வைக்கப்பட்டு பாதுகாப்பாக வைக்கப் பட்டன. பதிவான ஓட்டுகள் 315 மையங்களில் இன்று (ஜன.,2) எண்ணப்பட்டு வருகின்றன. ஓட்டுப்பதிவு மையங்களில் மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஓட்டு எண்ணும் மையங்களில், அதிகாரிகள், முகவர்கள், மொபைல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. முன்னிலை நிலவரம்:  மாவட்ட கவுன்சிலர் -  அதிமுக - 95                                                 திமுக - 115                                                 காங் -...
- Advertisement -spot_img

Latest News

லோக்சபா தேர்தல் எதிரொலி: சென்னை தாம்பரம் to நெல்லைக்கு சிறப்பு ரயில்., தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு!!!

தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் லோக்சபா தேர்தல் வாக்குப்பதிவு, நாளை (ஏப்ரல் 19) நடைபெற உள்ளது. இதனால் சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் தங்கி இருப்பவர்கள்...
- Advertisement -spot_img