2010 – 2019 பத்தாண்டுகள் ஒரு பார்வை

0
2010 - 2019

இத்தொகுப்பில் 2010 முதல் 2019 வரை நடைபெற்ற  உலகின் மறக்க முடியாத நிகழ்வுகளையும், தொழில்நுட்ப முன்னேற்றங்களையும், அறிவியல் அற்புதங்களையும் காண்போம்.

2010 – 2019 இடைப்பட்ட ஆண்டானது பலருக்கு சிறப்பான ஆண்டாகவும்,  சிலருக்கு கடினமானதாகவும் அமைந்தது.  இப்பத்தாண்டுகளில் தொழில் நுட்பத்தின் வளர்ச்சி அளப்பரியது.  அனைத்து விதமான செயல்கள், நிகழ்வுகள் விரல் நுனியில் வந்துவிட்டன ஸ்மார்ட்போன் வழியாக.  எவ்வாறாக இருப்பினும் இப்புத்தாண்டு அனைவருக்கும் சிறப்பானதாக அமைய வாழ்த்துக்கள்.

2010 ம் ஆண்டின் முக்கிய நிகழ்வுகள்:

     1.  இன்ஸ்டாகிராம், ஓலா, உபர் துவங்கப்பட்டது, வாட்ஸ் அப் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது.

     2.   சர்வதேச சந்தைக்கு அறிமுகமானது நெட் ஃபிளிக்ஸ்.

     3.  ஆப்பிள் சிஇஓ ஸ்டீவ் ஜாப்ஸ் உலகின் முதல் ஐபாட்டை அறிமுகம் செய்தார்.

     5.  உலகின் ஹிட் ஆல்பத்தை தந்தார் 16 வயது ஜஸ்டின் பைபர்.

     6.  முன்னாள் பெங்கால் முதல்வர் ஜோதிபாசு அவர்கள் காலமானார்.

2011 ம் ஆண்டின் முக்கிய நிகழ்வுகள்:

     1.  தாலிபான் தீவிரவாத தலைவர் ஒசாமா பின்லேடன் அமெரிக்க ராணுவத்தால் கொல்லப்பட்டார்.

     2.  இந்திய கிரிக்கெட் அணி 28 ஆண்டுகளுக்கு பிறகு உலகக் கோப்பையை வென்றது.

     3.  விண்வெளிக்கு சென்று பூமிக்கு மீண்டும் திரும்பும் ராக்கெட்டை தயாரிப்பில் இறங்கியது ஸ்பேஸ் எக்ஸ்.

     4.  ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ் நம்மை விட்டு பிரிந்தார்.

2012 ம் ஆண்டின் முக்கிய நிகழ்வுகள்:

     1.  டெல்லியில் நிர்பயா பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டார்.

     2.  ஆம் ஆத்மி டெல்லியில் ஆட்சியை கைப்பற்றியது.

     3.  மும்பை தீவிரவாத தாக்குதலில் முக்கியமானவரான அஜ்மல் கசாப் தூக்கில் இடப்பட்டார்.

     4.  ஒபாமா மீண்டும் அமெரிக்க அதிபரானார், புதின் மீண்டும் ரஷ்ய அதிபரானார்.

     5.  நிலவில் முதலில் கால் வைத்த நீல் ஆம்ஸ்ட்ராங் காலமானார்.

2013 ம் ஆண்டின் முக்கிய நிகழ்வுகள்:

     1.  சச்சின் டெண்டுல்கர் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றார்.

     2.  இந்தியாவில் தந்தி சேவை நிறுத்தப்பட்டது.

     3.  ட்விட்டர் அறிமுகம் செய்யப்பட்டது.

     4.  முன்னாள் தென்னாப்பிரிக்க அதிபர் நெல்சன் மண்டேலா, ஹாலிவுட் நடிகர் பால் வால்கர் ஆகியோர் நம்மை விட்டு பிரிந்தனர்.

2014 ம் ஆண்டின் முக்கிய நிகழ்வுகள்:

     1.  இந்தியாவில் பாஜக ஆட்சியை கைப்பற்றியது, மோடி பிரதமராக பதவி ஏற்றார்.

     2.  தோனி டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றார். கோலி இந்தியாவின் அதிகாரப்பூர்வ டெஸ்ட் கேப்டனாக அறிவிக்கப்பட்டார்.

     3.  மலேசியா விமானம் எம்.ஹச் 370 மாயமானது.

2015 ம் ஆண்டின் முக்கிய நிகழ்வுகள்:

     1.  நேபாளம் நாட்டில் நிகழ்ந்த நிலநடுக்கத்தில் 9000 பேர் உயிர் இழந்தனர்.

     2.  சுந்தர் பிச்சை கூகுள் சிஇஓ ஆனார்.

     3.  சாய்னா நெவால் பேட்மின்டன் தரவரிசையில் முதலிடம்.

     4.  இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் காலம் அவர்கள் காலமானார்.

2016 ம் ஆண்டின் முக்கிய நிகழ்வுகள்:

     1.  இந்தியாவில் பணமதிப்பிழப்பு அறிமுகம் செய்யப்பட்டு 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டது.

     2.  ஜம்மு காஷ்மீரில் சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் செய்தது இந்திய ராணுவம்.

     3.  டொனால்ட் டிரம்ப் அமெரிக்க அதிபராக தேர்ந்தெக்கப்பட்டார்.

     4.  தமிழக முன்னாள் முதல்வர் ஜெ ஜெயலலிதா மற்றும் பிடல் காஸ்ட்ரோ ஆகியோர் காலமாகினர்.

2017 ம் ஆண்டின் முக்கிய நிகழ்வுகள்:

     1.  இந்தியாவில் ஜிஎஸ்டி வரி அறிமுகம் செய்யப்பட்டது.

     2.  தடகள வீரர் உசேன் போல்ட் ஓய்வு பெற்றார்.

     3.  இந்தியாவைச் சேர்ந்த நூயி பெப்ஸி சிஇஓ பதவியிலிருந்து விலகினார்.

     4.  இங்கிலாந்து இளவரசர் ஹாரிக்கு திருமணம் நடந்தது.

2018 ம் ஆண்டின் முக்கிய நிகழ்வுகள்:

     1.  பெண்கள் சபரிமலைக்குள் நுழைய அனுமதி வழங்கியது உச்சநீதிமன்றம்.

     2.  அமெரிக்கா மெக்ஸிகோ எல்லையில் சுவர் கட்ட அனுமதி வழங்கியது.

     3.  நட்சத்திர வீரர் ஃபெடரர் 20 க்ராண்ட்ஸ்லாம் பட்டம் வென்று சாதனைப் படைத்தார்.

     4.  உலகின் மிகப்பெரிய சிலையான வல்லபாய் பட்டேல் சிலை குஜராத்தில் நிறுவப்பட்டது.

     5.  முன்னாள் பிரதமர் வாஜ்பாய், முன்னாள் முதல்வர் கருணாநிதி, முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி, பாலிவுட் நடிகை ஶ்ரீதேவி ஆகியோர் காலமானார்கள்.

2019 ம் ஆண்டின் முக்கிய நிகழ்வுகள்:

     1.  அயோத்தி வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது.

     2.  காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது.

     3.  மத்திய அரசின் குடியுரிமை சட்டத்தால் நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்தன.

     4.  சுந்தர் பிச்சை ஆல்பபெட்டின் சிஇஓ ஆனார்.

     5.  அருண் ஜெட்லி, சுஷ்மா சுவராஜ் ஆகியோர் காலமானார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here