இந்திய கிரிக்கெட் வீரருக்கு நடிகையுடன் நிச்சயதார்த்தம் – விரைவில் திருமணம்

0

இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரரான ஹர்திக் பாண்டியா, செர்பியாவைச் சேர்ந்த மாடலும் பாலிவுட் நடிகையுமான நடாஷா ஸ்டான்கோவிச்சை காதலித்து வந்தார்.  ஆனால் இருவரின் காதலும் ஒப்புக் இல்லாமல் ரகசியமாக நடைபெற்று வந்தது.  இந்நிலையில் புத்தாண்டு அன்று அவர்கள் இருவருக்கு இடையிலும் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. 

புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக துபாய் சென்றுள்ள இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா, நடுக்கடலில் தன்னுடைய நீண்டநாள் காதலி நடாஷா ஸ்டான்கோவிக்குடன் நிச்சயதார்த்தம் செய்து கொண்டார். இந்த நிச்சயதார்த்தத்தில் அவர்கள் இருவர் மட்டுமே இருந்தனர். நடாஷாவிற்கு மோதிரம் அணிவித்தும் கேக் வெட்டியும் நிச்சயதார்த்தத்தை நடுக்கடலில் ஸ்பீட் போட்டில் இந்த ஜோடி கொண்டாடியது. இதையடுத்து புகைப்படங்கள் மற்றும் வீடியோவை ஹர்திக் பாண்டியா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து கொண்டார்.

ஹர்திக் பாண்டியாவின் நிச்சயதார்த்தத்தை அடுத்து சக கிரிக்கெட் வீரர்கள், பாலிவுட் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் அவரை வாழ்த்து மழையில் நனைய விட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here