சிம்புவின் ”மஹா” திரைப்பட போஸ்டர் வெளியீடு – ரசிகர்கள் கொண்டாட்டம்

0

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்க உள்ள மாநாடு படத்தின் அப்டேட்டுக்காக காத்திருக்கும் ரசிகர்களுக்கு மஹா போஸ்டர் மகிழ்ச்சி அளித்துள்ளது.

ஹன்சிகா நடிப்பில் யு. ஆர். ஜமீல் இயக்கத்தில் வெளிவரவுள்ள ”மஹா” திரைப்படத்தில் சிம்பு கௌரவ தோற்றத்தில் நடிக்கிறார்.  இப்படத்தில் விமானியாக நடித்துள்ள சிம்புவின் போஸ்டர் நேற்று வெளியிடப்பட்டது.  சிம்புவின் மேல் சினிமாவில் பல சர்ச்சைகள் எழும்பிய நிலையில் அவரின் இந்த போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் பெரும் கொண்டாடத்தை ஏற்படுத்தியுள்ளது.

”மஹா” திரைப்படத்தில் ஹன்ஷிகா வின் காதலனாக நடித்துள்ள சிம்பு கௌரவத் தோற்றம் என்றாலும் படத்தில் 45 நிமிடம் வருவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்நிலையில் படத்தில் பர்ஸ்ட் லுக் போஸ்டர் படத்தின் இயக்குனர் ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டது.  போஸ்டரில் விமானி சீருடையில் சிம்பு ஸ்டைலாகவும், அதே சமயம் சீரியசான தோற்றத்துடனும் காணப்படுகிறார்.

ஒரு காலத்தில் காதலித்து பிரிந்த சிம்புவும், ஹன்சிகாவும் சேர்ந்து நடித்துள்ளது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளது.  இத்திரைப்படம் குறித்து இப்பட இயக்குனர் யு. ஆர். ஜமீல் தெரிவித்துள்ளதாவது, படத்தை துவங்கியபோதே இந்த கதாபாத்திரம் என் மனதில் இருந்தது. எஸ்.டி.ஆருக்கு கதை பிடித்து நடிக்க ஒப்புக் கொண்டதும் ஷூட்டிங்கை துவங்கினோம். சிம்புவின் கதாபாத்திரம் முக்கியமானது என்பதால் அவர் வரும் நேரத்தை நீட்டித்தோம் என்றார்.

சிம்புவின் கதாபாத்திரம் கோவாவை சேர்ந்த விமானியின் வாழ்க்கையில் நடந்த சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டது. சிம்புவின் கதாபாத்திரத்திற்கு ஒரிஜினல் விமானி சோயபின் பெயர் வைக்காமல் ஜமீல் என்று வைக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here