ஆம் ஆத்மி கட்சி பெண் எம்.பி.சுவாதி மலிவால் மீது தாக்குதல்., முதல்வர் கெஜ்ரிவாலுக்கு புதிய சிக்கல்!!!

0
ஆம் ஆத்மி கட்சி பெண் எம்.பி.சுவாதி மலிவால் மீது தாக்குதல்., முதல்வர் கெஜ்ரிவாலுக்கு புதிய சிக்கல்!!!

டெல்லி மதுபான முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்ட முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பல்வேறு சட்ட போராட்டத்திற்கு பிறகு, அண்மையில் ஜாமீனில் வெளிவந்துள்ளார். இதைத்தொடர்ந்து ஆம் ஆத்மி கட்சியின் பல்வேறு தலைவர்களும், அவரை நேரில் சந்தித்து வருகின்றனர். அந்த வகையில் ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த பெண் எம்.பி.சுவாதி மலிவால், நேரில் சந்திக்க சென்ற போது, கெஜ்ரிவாலின் உதவியாளர் பிபவ் குமார், தன்னை தாக்கியதாக குற்றம் சாட்டி உள்ளார்.

ஆனாலும் இது தொடர்பாக போன் மூலம் மட்டுமே போலீசாரிடம் புகார் அளித்துள்ளதாக கூறப்படுகிறது. சுவாதி மலிவாலின் தாக்குதலுக்கு பல்வேறு கட்சியினரும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், தாக்குதல் நடந்ததாக கூறப்படும் நேரத்தில், கெஜ்ரிவாலின் வீட்டில் பிபவ் குமார் இல்லை என ஆம் ஆத்மி கட்சி வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றனர்.

 Enewz Tamil டெலிக்ராம்

11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்., இந்த மாவட்டத்தில் தான் தேர்ச்சி அதிகம்? வெளியான அறிவிப்பு!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here