Friday, May 3, 2024

நீங்கள் தான் முதல்வர் வேட்பாளராக வேண்டும் – ஆலோசனை கூட்டத்தில் ரஜினிக்கு நிர்வாகிகள் வலியுறுத்தல்!!

Must Read

அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் தேர்தலில் ரஜினிகாந்த் கட்சி ஆரம்பித்தால் அதற்கு அவர் தான் முதல்வர் வேட்பாளராக இருக்க வேண்டும் என்று மக்கள் மன்ற நிர்வாகிகள் வலியுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜனவரி மாதம் தனது புதிய கட்சி குறித்த முடிவினை ரஜினி வெளியிடுவார் என்றும் எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக தேர்தல்:

வரும் மே மாதம் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தற்போது தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகளில் பெரிதாக தலைவர் என்று யாரும் இல்லை. அதனால் இந்த சட்டமன்ற தேர்தல் மிகுந்த எதிர்பார்ப்பிற்கு உள்ளாகியுள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான கமல் மற்றும் ரஜினிகாந்த் இந்த தேர்தல்களில் போட்டியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அதனை உறுதி செய்யும் விதமாக நடிகர் கமல் ஹாசன் இந்த ஆண்டு சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதாகவும், தன்னை முதல்வர் வேட்பாளராகவும் அறிவித்துள்ளார். இதனால் அனைவரது பார்வையும் ரஜினிகாந்த மீது திரும்பியது. இதனை அடுத்து இன்று சென்னையில் உள்ள ராகவேந்திரா மண்டபத்தில் தனது அரசியல் நிலைப்பாடு குறித்து மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றார்.

சவரனுக்கு ரூ.400 குறைந்த தங்க விலை – நகைப்பிரியர்களுக்கு ஜாக்பாட்!!

தமிழகத்தில் உள்ள 38 மாவட்ட நிர்வாகிகளும் இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். இந்த ஆலோசனை கூட்டத்தில் கட்சி தொடங்குவதால் ஏற்படும் சாதக பாதகங்கள் பற்றியும், ஜனவரி மாதம் கட்சி தொடலாமா என்பது போன்ற பல விஷயங்கள் ஆலோசிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதலாக, அனைத்து மன்ற நிர்வாகிகளும் கட்சி தொடங்கினால் ரஜினிகாந்த் தான் முதல்வர் வேட்பாளராக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தியதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்த திடீர் ஆலோசனை கூட்டத்தால் தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

TNPSC Group 4 பொதுத்தமிழ் கேள்விகளும் பதில்களும்

https://www.youtube.com/watch?v=vGmXZU8sGu0  Enewz Tamil இன்ஸ்டாகிராம்
- Advertisement -

More Articles Like This

- Advertisement -