Monday, May 27, 2024

அனைத்து அதிமுக எம்எல்ஏ.,கள் சென்னைக்கு வர வேண்டும் – தலைமையகத்தில் இருந்து உத்தரவு!!

Must Read

தமிழகத்தில் தேர்தல் குறித்த எதிர்பார்ப்புகள் அதிகரித்து வரும் நிலையில் அதிமுக கட்சி தலைமையகம் சார்பில் அனைத்து எம்எல்ஏகள் சென்னைக்கு வர வேண்டும் என்று உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தேர்தல்:

அடுத்த ஆண்டு மே மாதம் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்கள் உள்ள நிலையில் தேர்தல் பணிகளில் அனைத்து கட்சிகளும் தீவிரமாக இறங்கியுள்ளது. ஆளும் கட்சியான அதிமுக.,வில் பல பிளவுகள் ஏற்பட்டுள்ளன. வரும் தேர்தலில் யார் முதல்வர் வேட்பாளர் என்ற போட்டி தான் இதற்கு காரணம்.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

இன்னும் முதல்வர் வேட்பாளர் யார் என கட்சி சார்பில் முடிவு எடுக்கப்படவில்லை. கடந்த சில நாட்களுக்கு முன் நடத்த அதிமுக செயற்குழு கூட்டத்தில் கூட எடப்பாடி பழனிசாமி மற்றும் பன்னீர் செல்வம் இது குறித்து ஆலோசித்தனர். துணை முதல்வர் பன்னீர் செல்வம் அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் கூட தனது ஆதரவாளர்களுடன் தனது வீட்டில் ஆலோசனை நடத்தினார்.

தற்போதைய அறிவிப்பு:

செயற்குழு கூட்டத்தில் வரும் 7 ஆம் தேதி முதல்வர் வேட்பாளர் அறிவிக்கப்படுவார் என்று அதிமுக நிர்வாகம் கூறியுள்ளது. இப்படி ஒரு பரபரப்பான சூழலில் அனைத்து அதிமுக எம்.எல்.ஏ.,க்களும் வரும் 6ந் தேதி சென்னைக்கு வர வேண்டும் என்று அதிமுக கட்சி தலைமையகம் அறிவித்துள்ளதாக அதிமுகவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் கூறப்பட்டுள்ளது.

90s கிட்ஸ் கொஞ்சம் வளருங்கப்பா – தக்க பதிலடி கொடுத்த அனிதா சம்பத்!!

எம்.எல்.ஏ.க்களுடன் ஆலோசனை செய்த பிறகு முதல்வர் வேட்பாளர் அறிவிக்கப்பட உள்ளதாக கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

மீண்டும் பள்ளிகள் திறப்பு எப்போது? கோடை விடுமுறை நீட்டிப்பா?? வெளியான முக்கிய தகவல்!!!

இந்தியாவில்  ஏப்ரல், மே மாதங்களில் மக்களவைத் தேர்தல் நடைபெற இருந்ததால், பள்ளிகளுக்கு 2023-2024 ஆம் கல்வி ஆண்டு இறுதித் தேர்வுகள் முன்கூட்டியே நடத்தப்பட்டு கோடை விடுமுறை...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -