ஐபிஎல் 2024 தொடர் கடந்த மார்ச் 22ம் தேதி முதல் மிக சிறப்பாக அரங்கேறி வந்தது. இந்த நிலையில் இத்தொடரின் இறுதிப் போட்டியானது நேற்று பிரமாண்டமாக நடைபெற்றது. இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கோப்பையை தன் வசப்படுத்தியது. இந்நிலையில் இந்த தொடரின் பரிசுத்தொகை குறித்து காணலாம்.
இல்லத்தரசிகளே.., வார தொடக்கத்திலே காய்கறிகளின் விலை இவ்வளவா?? முழு விவரம் இதோ!!!
நடப்பு IPL தொடரில் வெற்றி பெற்ற கொல்கத்தா அணிக்கு பரிசு தொகையாக ரூ.20 கோடி வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து இறுதிப்போட்டியில் தோல்வி அடைந்த ஹைதராபாத் அணி ரூ.13 கோடியை பரிசாக பெற்றது . அதே சமயம் தகுதி சுற்றில் தோல்வி அடைந்த ராஜஸ்தான் அணிக்கு ரூ.7 கோடி பரிசாக வழங்கப்பட்டது. இதில் பெங்களூர் அணிக்கு ரூ.6.5 கோடி பரிசாக வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.