நகைச்சுவை நடிகர் வெங்கல் ராவ்க்கு நிதியுதவி வழங்கிய சிம்பு.. பெருமிதத்தில் ரசிகர்கள்!!

0
simbu

தமிழ் சினிமாவில் ஆள் ரவுண்டராக இருந்து வருபவர் தான் நடிகர் சிம்பு. அதே போல பல சர்ச்சைகளையும் சந்தித்து வந்தவரும் இவர் தான். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இப்பொழுது வரை பல ஹிட் படங்களை கொடுத்து வந்தார். கடந்த சில காலமாக பிரச்சனைகளை மட்டுமே சிம்பு சந்தித்து வந்தார். இந்த நிலையில் இவர் குறித்து ஓர் முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.

அதாவது சமீபத்தில் நகைச்சுவை நடிகர் வெங்கல் ராவ் ஒரு வீடியோ வெளியிட்டு, எனக்கு கை, கால்கள் விழுந்திடுச்சு. என்னால் நடக்க முடியவில்லை. சிகிச்சைக்கு பணமும் இல்லை. பிரபலங்கள், சினிமா சங்கங்கள் உதவுங்கள் என பேசி இருந்தார். இந்த விஷயம் சிம்புவின் காதிற்கு செல்ல அவர் வெங்கல் ராவிற்கு ரூ. 2 லட்சம் நிதியுதவி செய்துள்ளார். சிம்புவின் இந்த செயலால் அவரது ரசிகர்கள் பெருமிதத்தில் உள்ளனர்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here