மீண்டும் பள்ளிகள் திறப்பு எப்போது? கோடை விடுமுறை நீட்டிப்பா?? வெளியான முக்கிய தகவல்!!!

0

இந்தியாவில்  ஏப்ரல், மே மாதங்களில் மக்களவைத் தேர்தல் நடைபெற இருந்ததால், பள்ளிகளுக்கு 2023-2024 ஆம் கல்வி ஆண்டு இறுதித் தேர்வுகள் முன்கூட்டியே நடத்தப்பட்டு கோடை விடுமுறை அளிக்கப்பட்டன.  இதை அடுத்து கடந்தாண்டை போலவே இம்முறையும் தமிழகத்தில் கோடை விடுமுறை நீட்டிக்கப்படும் என்று எதிர்பார்த்த நிலையில்,  ஜூன் 6ம் தேதி புதிய கல்வி ஆண்டுக்கான வகுப்புகள் தொடங்கும் என தமிழக கல்வித்துறை அமைச்சர் அறிவித்திருந்தார்.

இதன் தொடர்ச்சியாக, தற்போது புதுச்சேரியிலும் திட்டமிட்டபடி வரும் 6ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. மேலும் 1 முதல் 12ம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் CBSE பாடத்திட்டம் அமல் படுத்தப்படும், பள்ளி திறந்தவுடன் பாடநூல், நோட்டு, சீருடை துணி மற்றும் தையல் கூலி வழங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here