இட்லி, தோசைக்கு சுவையான ‘கத்தரிக்காய் கொத்சு’ – வீட்டுல செஞ்சு அசத்துங்க!!

0
brinjal satny
brinjal satny

நாம் இட்லி, தோசைக்கு பல சட்னிகளை அரைத்து சாப்பிட்டிருக்கிறோம். ஆனால் கத்திரிக்காயை வைத்து சட்னி செய்வது புதுவிதமான ஒன்று. இப்பொழுது அந்த கத்திரிக்காயை வைத்து இட்லி, தோசைக்கு அருமையான சட்னி எப்படி செய்வது என பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

மல்லி – 3 தேக்கரண்டி

வரமிளகாய் – 6

துவரம்பருப்பு – 1 தேக்கரண்டி

உளுந்து – 1 தேக்கரண்டி

கடலைப்பருப்பு – 1 தேக்கரண்டி

சீரகம்

வெந்தயம் – 1 தேக்கரண்டி

வெங்காயம் – 100 கி

கத்திரிக்காய் – 1/4 கிலோ

புளித்தண்ணீர் – 1 கப்

செய்முறை:

முதலில் கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் மல்லி மற்றும் வர மிளகாயை நன்கு வறுத்து எடுத்துக் கொள்ளவும். அதன்பின் கடலைப் பருப்பு, துவரம் பருப்பு, உளுந்து இவற்றை போட்டு வறுத்து எடுத்துக் கொள்ளவும். வறுத்து வைத்த இரண்டையும் மிக்ஸியில் போட்டு பொடி செய்து எடுத்துக் கொள்ளவும். இப்பொழுது வாணலியில் எண்ணெய் ஊற்றி அதில் சின்ன வெங்காயத்தை முழுசாக போட்டு வதக்கவும்.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

brinjal satny
brinjal satny

அதன்பின் கத்தரிக்காயை போட்டு வதக்கவும். 5 நிமிடங்களுக்கு பிறகு அதனை இறக்கி கொரகொரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். இப்பொழுது மற்றொரு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் கடுகு, சீரகம், வர மிளகாய் போட்டு தாளித்து அதில் கத்தரிக்காய் கலவையை போட்டு வதக்கவும். நன்கு வதக்கியதும் அரைத்து வைத்துள்ள மசாலாவையும் , உப்பையும் அதில் சேர்த்து அடிபிடிக்காமல் வதக்கவும்.

brinjal satny
brinjal satny

சிறிது புளித்தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். அடிபிடிக்காமல் கிளறிக் கொண்டிருந்தால் எண்ணெய் பிரிந்து மேலே வரும். இப்பொழுது கொத்தமல்லி தூவி இறக்கினால் சுவையான ‘கத்தரிக்காய் கொத்சு’ தயார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here