Friday, May 17, 2024

கேஸ் சிலிண்டர் விலை அதிரடி உயர்வு – வணிகர்கள் அதிர்ச்சி!!

Must Read

ஒவ்வொரு மாதமும் விலை நிலவரம் மாற்றப்படுவதை அடுத்து சிலிண்டர் விலை சர்வதேச சந்தை நிலவரத்தை ஒட்டி ஏற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிலிண்டர் விலை:

சிலிண்டர் பயன்படுத்துவதால் சீக்கிரமாக சமையல் வேலை முடிந்து விடுவதால் மக்கள் அனைவரும் இதனை தான் பயன்படுத்துகின்றனர். கடந்த மாதம் வீட்டில் உபயோகிக்கும் சிலிண்டர் விலை 610 என்ற விலையிலும், வணிக சிலிண்டர் 1,250 ரூபாய் என்றும் விற்பனை செய்யப்பட்டது.

அனைத்து அதிமுக எம்எல்ஏ.,கள் சென்னைக்கு வர வேண்டும் – தலைமையகத்தில் இருந்து உத்தரவு!!

ஒவ்வொரு மாதமும் சிலிண்டர் விலை சர்வதேச சந்தை நிலவரத்திற்கேற்ப மாற்றப்படும். இந்தியாவில் சிலிண்டர் இந்தியன் ஆயில், பாரத் மற்றும் ஹிந்துஸ்தான் ஆகிய மூன்று எண்ணெய் நிறுவனங்கள் வீடுகளுக்கு விற்பனை செய்கின்றனர்.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

மக்கள் சமையல் செய்ய அத்தியாவசியமாக பயன்படுத்தும் இந்த வீட்டு சிலிண்டர் 14.20 கிலோ எடையிலும், வணிக சிலிண்டர் 19 கிலோ எடையுடன் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இப்படியான நிலையில் தற்போது சிலிண்டர் விலையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

விலை மாற்றம்:

இந்த மாதத்தில் வீட்டில் பயன்படுத்தும் சிலிண்டர் விலை எந்த மாற்றமும் இன்றி 610 என்று விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால், வணிக சிலிண்டர் 26 ரூபாய் உயர்ந்து 1,276 ரூபாய் என்று விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வீட்டு சிலிண்டர் விலை ஏற்றப்படாததால் மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர். சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு மானியம் அவர்களின் வங்கி கணக்கிற்கு சென்று விடும்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

தமிழக அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு., இந்த தேதி வரை விண்ணப்பிக்கலாம்? வெளியான அறிவிப்பு!!!

தமிழக தொடக்க கல்வி மற்றும் பள்ளிக்கல்வித்துறையில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு, ஆண்டுதோறும் பொது மாறுதல் கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நடப்பு 2024-25 ஆம் கல்வியாண்டில்,...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -