Friday, May 3, 2024

உலக மக்கள் தொகையில் 10% பேருக்கு கொரோனா இருக்கும் – WHO அதிர்ச்சி தகவல்!!

Must Read

உலக மக்கள் தொகை கணக்கில் 10 சதவீதம் பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருக்கலாம் என்று உலக சுகாதார அமைப்பு அதிர்ச்சி தகவல் ஒன்றை தெரிவித்துள்ளது. இந்த தகவலை உலக சுகாதார அமைப்பின் அவசர திட்ட இயக்குனர் தெரிவித்துள்ளார்.

கொரோனா நோய் பாதிப்பு:

கடந்த சில மாதங்களுக்கு முன் சீனாவில் இருந்து கொரோனா என்ற வைரஸ் உலகில் உள்ள அனைத்து நாடுகளுக்கும் பரவியது. இந்த ஆண்டின் ஆரம்பத்தில் குறைவாக பரவிய கொரோனா நோய் தொற்று தற்போது குளிர்காலம், பொது முடக்க தளர்வுகள் போன்ற காரணங்களால் அதிகமாக பரவி வருகிறது. தற்போது உள்ள உலக நிலவரப்படி 3 கோடிக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1 லட்சமாக உயர்ந்துள்ளது.

குறையும் ஆனா குறையாது… – இன்றைய தங்க விலையால் மக்கள் கவலை!!

உலக சுகாதார அமைப்பு அனைத்து அரசுகளுக்கும் கொரோனா குறித்த எச்சரிக்கையை தொடர்ந்து விடுத்து வருகின்றது. கடந்த சில நாட்களுக்கு முன் உலக சுகாதார அமைப்பின் தலைவர் அனைத்து அரசுகளும் இனி தான் கவனமாக இருக்க வேண்டும் என்று கூறினார். தற்போது உலக சுகாதார அமைப்பின் அவசர திட்ட இயக்குனர் மைக்கேல் ரையான் அதிர்ச்சி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதிர்ச்சி தரும் தகவல்:

அவர் கூறிருப்பதாவது “உலக சுகாதார அமைப்பு கணிப்பின்படி உலகத்தில் மொத்தமாக 760 கோடிக்கும் மேற்பட்டவர்கள் உள்ளனர். தற்போது கூறப்பட்டிருக்கும் நிலவரப்படி 3 கோடி 76 லட்சம் மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், உலகில் உள்ள 10 சதவீதம் அதாவது 76 கோடி மக்கள் இந்த வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு இருக்கலாம்” என்று தெரிவித்துள்ளார்.

உடனுக்குடன் அப்டேட்களை பெற Enewz சமூக வலைதள பக்கங்களில் இணையுங்கள்!!

world health organization michael ryan
world health organization michael ryan

உலக சுகாதார அமைப்பின் அவசர திட்ட செயல் இயக்குனர் இவ்வாறு தெரிவித்து இருப்பது அனைத்து தரப்பினரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

TNPSC Group 4 பொதுத்தமிழ் கேள்விகளும் பதில்களும்

https://www.youtube.com/watch?v=vGmXZU8sGu0  Enewz Tamil இன்ஸ்டாகிராம்
- Advertisement -

More Articles Like This

- Advertisement -