Friday, May 3, 2024

குறையும் ஆனா குறையாது… – இன்றைய தங்க விலையால் மக்கள் கவலை!!

Must Read

சென்னையில் ஆபரணத் தங்கம் இன்று விலை அதிகரித்துள்ளது. கடந்த சில நாட்களாக குறைந்து வந்த தங்க விலை இன்று மீண்டும் உயர்ந்துள்ளதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தொடர் விலை ஏற்றம்:

கொரோனா பரவல் அச்சம் காரணமாக இந்தியாவில் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. இதனால் இந்தியாவில் உள்ள அனைத்து தொழில் நிறுவனங்கள் முடங்கின. இதன் விளைவாக பங்குச் சந்தையும் சரிவு அடைந்தது. இதனால் முதலீட்டாளர்கள் தங்களது பணத்தினை பாதுகாக்கவும் எதிர்கால நலனுக்காகவும் தங்கத்தில் முதலீடு செய்தனர். தங்கம் பாதுகாப்பான முதலீட்டாக அனைவராலும் கருதப்பட்டது.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

அதனால் தான் ஊரடங்கு காலத்திலும் தங்கம் மற்றும் வெள்ளி விலை ஏற்றம் கண்டு வந்தது. இது அனைத்து தரப்பு மக்களையும் அதிர்ச்சி அடைய வைத்தது. கடந்த ஆகஸ்ட் மாதம் ஒரு சவரன் தங்கம் 43 ஆயிரம் என்று உச்சபட்ச விலையை அடைந்தது. இது தங்க விலை வரலாற்றில் மிகவும் அதிகமான விலை நிலவரம் ஆகும். பின், செப்டம்பர் மாதங்களில் விலை நிலவரம் ஏற்ற இறக்கங்களோடு இருந்து வந்தது.

இன்றைய விலை நிலவரம்:

தங்க விலை ஏறிய அளவில் குறையவில்லை என்று சொன்னாலும் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்தது. இது மக்களை சற்று நிம்மதி அடைய வைத்தது. இந்த மாத தொடக்கத்திலும் தங்க விலை தொடர்ந்து சரிந்து வந்தது. இது மக்களை மகிழ்ச்சி அடைய வைத்தது. ஆனால், இன்று தங்க விலை அதிரடியாக உயர்ந்துள்ளது.

பொது முடக்க தளர்வால் அதிகமாக பரவிய கொரோனா – ஆய்வில் அதிர்ச்சி தகவல்!!

இன்று சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு 192 ரூபாய் உயர்ந்து ரூ.38,760 என்று விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒரு கிராம் தங்கம் ரூ.4,845 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது. தூய தங்கம் ஒரு கிராம் ரூ.5,086 என்று விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சவரன் 40,688 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை ஒரு கிராம் 65.20 என்ற விலை நிலவரத்தில் விற்கப்படுகிறது.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

முதல்வர் கெஜ்ரிவாலை தேர்தல் நேரத்தில் கைது செய்தது ஏன்? மத்திய அமைச்சர் அமித் ஷா விளக்கம்!!!

டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அண்மையில் கைது செய்யப்பட்டார். இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில், மக்களவை...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -