Friday, May 3, 2024

பொது முடக்க தளர்வால் அதிகமாக பரவிய கொரோனா – ஆய்வில் அதிர்ச்சி தகவல்!!

Must Read

5 ஆம் கட்ட தளர்வு எதிரொலியாக தற்போது கொரோனா பரவல் அதிதீவிரமாக பரவி உள்ளது என்று ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இந்த பரவலுக்கு Super Spreading Event தான் காரணம் என்று கூறுகின்றனர் மருத்துவர்கள்.

கொரோனா பாதிப்பு:

கடந்த டிசம்பர் மாதம் சீனாவில் உள்ள உஹான் மாகாணத்தில் இருந்து கொரோனா என்ற நோய் தொற்று அதிகமாக பரவியது. இந்த நோய் தொற்று கொஞ்சம் கொஞ்சமாக அனைத்து நாடுகளுக்கும் பரவியது. தற்போது உள்ள நிலவரப்படி உலகில் உள்ள 3 கோடிக்கும் அதிகமான மக்கள் இந்த நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று கணிப்புகள் கூறுகின்றது. ஆரம்பத்தில் இந்த நோய் தொற்று அதிகமாக பாதித்ததால் இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

தற்போது இந்த பொது முடக்கம் பல்வேறு தளர்வுகளுடன் 5 கட்டமாக பின்பற்றப்பட்டு வருகின்றது. இந்த ஊரடங்கில் கூறப்பப்ட தளர்வுகள் காரணமாக மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளனர். 100 சதவீத பணியாளர்களுடன் தொழில் நிறுவனங்கள் செயல்படலாம் என்றும் பொதுப் போக்குவரத்து செயல்படலாம் என்றும் கூறப்பட்டது. இதனால் மக்கள் தங்களது அன்றாட வாழ்வியல் முறைக்கு திரும்பி உள்ளனர். இதனால் கொரோனா நோய் தொற்றின் மேல் இருந்த பயம் விலகி உள்ளது.

Super Spreading Event எனப்படும் பரவல்:

இதன் காரணமாக தமிழகத்தின் தலைநகரான சென்னையில் நோய் பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. கடந்த செப்டம்பர் 23 ஆம் தேதி வரை நிலைமை சீராக தான் இருந்து வந்துள்ளது. ஆனால், தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால் நோய் பாதிப்பு அதிகரித்துள்ளதாக ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இப்படி அதிவேகமாக பரவுவதற்கு காரணம் super spreading event எனப்படும் அதிதீவிர பரவல் தான் என்று மருத்துவர்கள் கருதுகின்றனர்.

நாட்டை உலுக்கிய ஹத்ராஸ் பாலியல் வன்கொடுமை வழக்கு – இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணை!!

அலுவலகங்களில் ஒன்றாக அமர்ந்து சாப்பிடுவது, கூட்டமாக வேலை பார்ப்பது, நிகழ்ச்சிகளில் பங்கேற்பது தான் பெரும்பாலான பரவலுக்கு காரணம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். இதற்கு சில எளிய வழிமுறைகளை பின்பற்றினாலே தொற்று பாதிப்பில் இருந்து தப்பிக்கலாம் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். குளிர்சாதன வசதிகளை அலுவலகங்களில் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். முகக்கவசம் எப்போதும் அணிந்திருத்தல் அவசியம். பொது மக்கள் கூடும் இடங்களை தற்போது திறப்பதை தவிர்க்க வேண்டும்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

TNPSC Group 4 பொதுத்தமிழ் கேள்விகளும் பதில்களும்

https://www.youtube.com/watch?v=vGmXZU8sGu0  Enewz Tamil இன்ஸ்டாகிராம்
- Advertisement -

More Articles Like This

- Advertisement -