தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக திகழும் காஜல் அகர்வாலுக்கு திருமணம் எப்பொழுது என்று பலரும் கேட்டு வந்தனர். அண்மையில் அவருக்கு ரகசியமாக நிச்சயதார்த்தம் நடந்ததாக கூறப்பட்டது. தற்போது காஜல் அகர்வால் திருமணம் செய்யும் தொழிலதிபரின் பெயர் வெளியாகியுள்ளது.
காஜல் அகர்வால்
மாடலிங் துறையில் முதன்முதலில் கால் பதித்தவர் காஜல் அகர்வால். இவர் 2004 இல் ஹிந்தியில் தான் முதன்முதலில் நாயகியாக அறிமுகமானார். அதன் பிறகு தெலுங்கில் ‘சந்தாமாமா’ என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த சந்தாமாமா படம் தான் தமிழில் ‘அஆஇஈ’ ஆக உருவானது.
அதன் பிறகு அவருக்கு பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை. தமிழில் பொம்மலாட்டம் படத்தில் அர்ஜுனுக்கு ஜோடியாகவும், பரத்க்கு ஜோடியாக பழனி என்ற படத்திலும் நடித்திருந்தார். இருப்பினும் தெலுங்கில் மஹதீரா படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இப்படமே அவருக்கு திருப்பு முனையாக அமைந்தது.
இப்படத்தின் மூலம் மக்களிடையே இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதன்பிறகே இவர் முன்னணி நடிகையாக திரையுலகில் வலம் வந்தார். தமிழில் விஜய், அஜித் என முன்னணி நடிகர்களுடன் நடித்தார். தமிழில் மட்டுமல்ல தெலுங்கிலும் நல்ல வரவேற்பு கிடைத்தது. ரசிகர்களின் கனவு கன்னியாகவே காஜல் வலம் வந்தார். தற்போது ஷங்கர் இயக்கி கமல்ஹாசன் நடிப்பில் உருவாகும் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார் காஜல் அகர்வால்.
இவரின் தங்கையான நிஷா அகர்வால் 2013 இல் திருமணம் நடந்து மும்பையில் செட்டில் ஆகி விட்டார். 35 வயதாகும் காஜலுக்கு எப்பொழுது திருமணம் என்று 1 வருடங்களாக ரசிகர்கள் கேட்டுக் கொண்டே இருந்தனர். தற்போது அவருக்கு திருமணம் நிச்சயமாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஏற்கனவே அவருக்கு ரகசியமாக நிச்சயதார்த்தம் நடந்ததாக தகவல்கள் வெளியாகின. இதற்கு காஜல் அகர்வால் எந்த மறுப்பும் தெரிவிக்கவில்லை. தற்போது காஜலுக்கு தொழிலதிபரான கெளதம் கிச்சுலுடன் திருமணம் முடிவாகியுள்ளது.
— Kajal Aggarwal (@MsKajalAggarwal) October 6, 2020
இவர்களில் திருமணம் அக்டோபர் 30 இல் மும்பையில் நடக்க உள்ளதாம். இதனால் காஜல் ரசிகர்கள் குஷியில் உள்ளனர். இதற்கான இன்விடேஷனை காஜல் வெளியிட்டுள்ளார். தற்போது அது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.