CSK vs RCB 2024: முக்கிய போட்டியில் இணையும் ‘இந்தியன் 2’ படக்குழு.. வெளியான முக்கிய அப்டேட்!!

0
CSK vs RCB 2024: முக்கிய போட்டியில் இணையும் 'இந்தியன் 2' படக்குழு.. வெளியான முக்கிய அப்டேட்!!

IPL தொடரின் 17வது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்த நிலையில் இன்று  (மே 18) நடைபெறும் முக்கிய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் பெங்களூரு அணி  தோல்வி அடைந்தாலோ, மழையால் ரத்து செய்யப்பட்டாலோ சென்னை அணி பிளே ஆப் சுற்றுக்கு செல்லும்.

TNPSC Group 4 பொதுத்தமிழ் முக்கிய கேள்விகள் Part 14

அதே சமயம் பெங்களூர் 18 ரன்கள் வித்தியாசத்தில் அல்லது 18.1 ஓவருக்குள் சேசிங் செய்தால் அந்த அணி பிளே ஆப் சுற்றுக்கு செல்லும்.  இதன் காரணமாக ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர். இந்த நிலையில் இப்போட்டி குறித்து ஓர் முக்கிய தகவல் வெளியாகி உள்ளது. அதாவது  CSK vs RCB அணிகளுக்கு இடையிலான போட்டியின் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் நேரலையில் மாலை 6 மணிக்கு நடிகர் கமலஹாசன் மற்றும் இயக்குனர் சங்கர் ஆகியோர் பங்கேற்க உள்ளதாக ‘இந்தியன் 2’ படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Enewz Tamil WhatsApp Channel 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here