தமிழகத்தில் அக்.15 முதல் தியேட்டர்கள் திறப்பு?? மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!!

0

நாடு முழுவதும் அக்டோபர் 15ம் தேதி முதல் தியேட்டர்களை திறக்க மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ள நிலையில் அதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் இன்று வெளியிடப்பட்டு உள்ளன. இந்நிலையில் தமிழகத்தில் திரையரங்குகளை திறக்க தற்போதைக்கு வாய்ப்பில்லை என அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்து உள்ளார்.

தியேட்டர்கள் திறப்பு:

கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவால் தியேட்டர்கள் மூடப்பட்டன. இதனால் அதனை சார்ந்துள்ள தொழிலாளர்கள் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகினர். எனவே விரைந்து தியேட்டர்களை திறக்க அனுமதி அளிக்க வேண்டும் எனவும், OTT இல் திரைப்படங்களை வெளியிடுவதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கவும் திரையரங்க உரிமையாளர்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்நிலையில் அக்டோபர் 15ம் தேதி முதல் தியேட்டர்களை 50% பார்வையாளர்களுடன் திறக்க மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் இன்று வெளியிட்டு உள்ளார். அதில் ஆரோக்ய சேது செயலி கட்டாயம், குளிர்சாதன வசதியில் கட்டுப்பாடு போன்ற கொரோனா கட்டுப்பாட்டு நெறிமுறைகள் கூறப்பட்டு உள்ளன. இதற்கிடையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கடம்பூர் ராஜு தமிழகத்தில் தியேட்டர்களை திறப்பு தற்போதைக்கு இல்லை என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

kadambur raju
kadambur raju

இது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் அறிவிப்பார் என கூறிய கடம்பூர் ராஜு, OTT இல் படங்களை வெளியிடுவது மத்திய மற்றும் மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் இல்லை என தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here