தமிழகத்தில் பள்ளிகளை திறப்பதற்கான நேரம் இதுவல்ல – அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி!!

0

நாடு முழுவதும் அக்.15ம் தேதி முதல் பள்ளிகளை திறக்க மத்திய அரசு அனுமதி வழங்கி அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டு உள்ள நிலையில், தமிழகத்தில் பள்ளிகளை திறப்பதை விட மாணவர்களின் உயிர்தான் முக்கியம் என அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்கள் சந்திப்பில் பேட்டி அளித்துள்ளார்.

பள்ளிகள் திறப்பு:

கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் மூடப்பட்ட பள்ளிகள் தற்போது வரை திறக்கப்படவில்லை. இந்நிலையில் மத்திய அரசு அக்.15 முதல் பள்ளிகளை திறப்பதற்கான அனுமதியை வழங்கி உள்ளது. இதனையொட்டி மாநில அரசுகள் அதற்கான நடவடிக்கைகளில் இறங்கி உள்ளன. வகுப்பறைகளை சுத்தம் செய்வது, மாணவர்களின் வருகைக்கான ஏற்பாடு என அனைத்தும் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு குறித்து இதுவரை முடிவு செய்யப்படவில்லை. ஏற்கனவே இது குறித்து வெளியிடப்பட்ட அரசாணையையும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் நிறுத்தி வைத்துள்ளார்.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

minister sengottaiyan
minister sengottaiyan

இந்நிலையில் இன்று சென்னை கோட்டூர்புரத்தில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய அமைச்சர் பள்ளிகளை ஆய்வு செய்வதில் எவ்வித கால தாமதமும் இருக்கக் கூடாது என அரசு அலுவலர்களுக்கு ஆலோசனை வழங்கினார். மேலும் இருமொழிக் கொள்கையில் அரசு உறுதியாக உள்ளதாகவும், ஆன்லைன் வகுப்புகளை முறையாக கண்காணித்து, மாணவர்களின் பார்வைத் திறனை அவ்வப்போது சோதிக்குமாறும் உத்தரவிட்டு உள்ளார்.

தமிழகத்தில் அக்.15 முதல் தியேட்டர்கள் திறப்பு?? மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!!

ஆலோசனை கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், தமிழகத்தில் பள்ளிகளை திறப்பதற்கான நேரம் இதுவல்ல என தெரிவித்துள்ளார். மேலும் பள்ளிகளை திறப்பதை விட மாணவர்களின் உயிர் தான் முக்கியம் என திட்டவட்டமாக கூறியுள்ளார். அதுமட்டுமின்றி சுகாதாரத்துறை, கல்வித்துறை, வருவாய் துறையினரிடம் ஆலோசித்த பின்னரே இது குறித்து உரிய முடிவெடுக்கப்படும் என அமைச்சர் உறுதிபட தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here