ஒரே மாதத்தில் உடல் எடையை குறைக்க வேண்டுமா?? எளிய உணவு முறைகள் இதோ!!

0
weight loss
weight loss

உடல் எடையை குறைக்க நாம் பல முயற்சிகளை மேற்கொண்டும் அதற்கான தீர்வு கிடைக்கவில்லையே என பலர் சோர்ந்து போவதுண்டு. மேலும் பலர் உடல் எடையை குறைக்க விளம்பரங்களை நம்பி கெமிக்கல் பொருட்களை வாங்கி குடிக்கிறோம். இது மேலும் நமது உடலுக்கு பிரச்னையை தான் ஏற்படுத்தும். இப்பொழுது உடல் எடையை எளிதாக குறைப்பது எப்படி என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

உடல் எடையை குறைக்க??

உடல் பருமன் அதிகரிப்பதற்கு முக்கிய காரணமே நாம் எடுத்துக்கொள்ளும் உணவு முறை தான். சிலர் அதிகமாக சாப்பிட்டால் உடல் பருமன் ஏற்படும் என்று நினைத்து கொண்டுள்ளனர். ஆனால் அது முற்றிலும் தவறான ஒன்று. ஏனெனில் நாம் சாப்பிடாமல் இருக்கும்போது தான் உடல் காற்றை இழுத்துக்கொள்ளும். இதனால் உடல் பருமனும் ஏற்படும்.

woman-weight-loss-before-after-1
woman-weight-loss-before-after-1

நமது உடலுக்கு சரியான அளவிலான உணவை உட்கொண்டால் தேவையற்ற சதை, கொழுப்பு போன்றவை ஏற்படாது. மேலும் துரித உணவிற்கு பலர் அடிமையாகியுள்ளனர். இதனால் தான் உடல் எடை அதிகரிக்கிறது. கூடுமானவரை இந்த மாதிரியான உணவுகளை நாம் தவிர்த்து வந்தால் கண்டிப்பாக உடல் பருமனை கட்டுப்படுத்தலாம்.

வழிமுறைகள்

  • முதலில் 1 தேக்கரண்டி சோம்பு மற்றும் அமுக்கிரா வேரை எடுத்துக்கொள்ளவும்.  இதனை நீரில் போட்டு மஞ்சள்தூள் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். இந்த நீரை குடித்து வந்தால் உடலில் உள்ள கொழுப்புகள் மறையும். இதனை காலையில் வெறும் வயிற்றில் குடித்து வர வேண்டும்.
weight loss
weight loss
  • சுரைக்காயில் அதிக மருத்துவ குணங்கள் உள்ளன. இதனை வாரத்திற்கு ஒரு முறையாவது உணவில் எடுத்துக்கொள்ள வேண்டும். சுரைக்காய்க்கு கொழுப்புகளை கரைக்கும் சக்தி அதிகம்.
  • பப்பாளி காயை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.  இது உடல் அழகை மட்டும் தர கூடியது அல்ல கெட்ட கொழுப்புகளையும் நீக்க கூடியது.

உடனுக்குடன் அப்டேட்களை பெற Enewz சமூக வலைதள பக்கங்களில் இணையுங்கள்!!

weight loss
weight loss
  • எலுமிச்சை சாறு மற்றும் இஞ்சி சாறு இந்த இரண்டையும் கலந்து தேன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும்.  இது உடலில் ஜீரண சக்தியை அதிகரிக்கும்.
  • தினமும் காலையில் அருகம்புல் ஜூஸ் குடித்து வந்தால் உடல் பருமன் உள்ளவர்கள் நல்ல மாற்றத்தை காணலாம்.
weight loss
weight loss
  • மேலும் கல்யாண முருங்கை சாறு, வாழைத்தண்டு சாறு போன்றவற்றை குடித்து வர வேண்டும். இதனால் உடலில் கொழுப்புகள் சேராமல் உடல் எடையை குறைக்க உதவும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் 1 மாதத்தில் நல்ல பலனை பெறலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here