தமிழக  மக்களே., நாளை  தொடங்கவிருக்கும் அக்னி நட்சத்திரம்.., வானிலை மையம் விடுத்த  எச்சரிக்கை!!

0
தமிழக  மக்களே., நாளை  தொடங்கவிருக்கும் அக்னி நட்சத்திரம்.., வானிலை மையம் விடுத்த  எச்சரிக்கை!!
மற்ற கோடை நாட்களை விட அக்னி நட்சத்திர காலத்தில் வெயில் அதிகரிக்கும் என்பது சாஸ்திரத்தில் கூறப்பட்ட அடிப்படையான கருத்தாகும். அந்த வகையில் நாளை (மே 4) அக்னி நட்சத்திரம் தொடங்கி மே 28 உடன் முடிவடைகிறது. இதனால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வறண்ட வானிலையே நிலவும் என கூறப்பட்டு உள்ளது.

சென்னையில் அதிகபட்சமாக, 39 டிகிரி செல்ஷியஸ் வரை வெயில் பதிவாகும். கரூர், திருச்சி, மதுரை, சேலம், தர்மபுரி உள்ளிட்ட மாவட்டங்களில், இன்று, 41 டிகிரி செல்ஷியஸ் வரை வெயில் சுட்டெரிக்கலாம். எனவே, காலை, 11:00 முதல், பகல், 3:00 மணி வரை, வெயிலில் வேலை செய்வதையும், அலைவதையும் தவிர்க்க வேண்டும் என எச்சரிக்கை  விடுத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here