Tuesday, April 30, 2024

தமிழகத்தில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் – வானிலை மையம் தகவல்!!

Must Read

தமிழகத்தில் உள்ள 4 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புதிதாக ஒரு காற்றழுத்தத்தாழ்வு பகுதி அந்தமான் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வரும் 14 ஆம் தேதி உருவாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர் மழை:

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும். ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் உள்ள சில இடங்களில் இடியுடன் கூடிய லேசான மழை பெய்யும்.

பாலியல் குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் – மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சகம் கடிதம்!!

Weather department issues orange rain alert for Delhi, warns of traffic disruption, flooding

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானிலை மேகமூட்டத்துடன் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த 48 மணி நேரத்தில் லேசான மழை பெய்ய வாய்ப்புகள் உள்ளது.

வெப்பநிலை மற்றும் மழைப்பதிவு:

வெப்பநிலை தமிழகத்தில் குறைந்தபட்சமாக 34 டிகிரி செல்சியஸ் இருக்கும் என்றும் அதிகபட்சமாக 27 டிகிரி செல்சியஸ் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. பரவலாக எல்லா மாவட்டங்களிலும் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.

உடனுக்குடன் அப்டேட்களை பெற Enewz சமூக வலைதள பக்கங்களில் இணையுங்கள்!!

Rainfall adding up in Fort St. John and the North Peace | Alaska Highway News

கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் உள்ள கடலூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக 13 செ.மீ மழை பதிவாகியுள்ளது, ஒகேனக்கல், மதுரை பகுதிகளில் 8 செ.மீ மழை, மேலூர், சிவகங்கை, நிலக்கோட்டை பகுதிகளில் 7 செ.மீ மழை, குறைந்தபட்சமாக மங்களபுரம், பொன்னகரம், திருபுவனம் பகுதிகளில் 4 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

மீனவர்களுக்கு எச்சரிக்கை:

கடலோர பகுதிகளில் வரும் நாட்களில் சூறாவளி காற்று வீசக்கூடும் என்பதால் வானிலை மையம் மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

  • தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள மன்னார் வளைகுடாவில் 10 ஆம் தேதி முதல் 13 ஆம் தேதி வரை பலத்த சூறாவளி காற்று 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
  • கடலோர ஒடிசா மற்றும் வடக்கு ஆந்திர பகுதிகளில் 11 மற்றும் 12 ஆம் தேதிகளில் பலத்த காற்று வீசக்கூடும்.
  • இந்த நாட்களில் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகின்றனர்.
- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

IPL 2024: 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற கொல்கத்தா…, டெல்லி மீண்டும் தோல்வி!!

IPL தொடரின் 47 வது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதின. இப்போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய டெல்லி...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -