Saturday, April 20, 2024

பாலியல் குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் – மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சகம் கடிதம்!!

Must Read

இந்தியாவில் தற்போது பெண்களுக்கு எதிராக பாலியல் துன்புறுத்தல்கள் அதிகரித்து வருவதால் அதனை தடுக்கும் பொருட்டு மத்திய உள்துறை அமைச்சகம் மாநில அரசுகளுக்கு ஒரு கடிதம் அனுப்பி உள்ளது. அதில் பாலியல் குற்றம் புரிபவர்களுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

அதிகரிக்கும் பாலியல் குற்றங்கள்:

கடந்த சில வருடங்களாக இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகின்றது. அதிகமாக பாலியல் குற்றம் நடக்கும் மாநிலங்களில் முதல் இடத்தில் உத்தரபிரதேசம் உள்ளது. இந்தியாவில் இது குறித்து நடத்தப்பட்ட ஆய்வில் ஒரு நாளைக்கு 89 பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகின்றனர் என்ற அதிர்ச்சி தகவல் கிடைத்தது.

உடனுக்குடன் அப்டேட்களை பெற Enewz சமூக வலைதள பக்கங்களில் இணையுங்கள்!!

இதனை தடுக்கும் பொருட்டு மத்திய அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. அதன் ஒரு பகுதியாக பெண்களுக்கு பாலியல் துன்புறுத்தல் குற்றாவாளிகள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும்:

இது குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் மாநில அரசுகளுக்கு கடிதம் ஒன்றையும் அனுப்பியுள்ளது. இதில் குறிப்பிடப்பட்டதாவது,

  • ஒரு பெண் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானால் குற்றம் புரிந்தவர் மீது உடனடியாக போலீசார் எப்ஐஆர் பதிவு செய்ய வேண்டும். கூடிய விரைவாக தடயங்களை சேகரிக்க வேண்டும்.
  • தொடர்ச்சியாக ஒருவர் பாலியல் குற்றங்களில் ஈடுபட்டால் அவர்களின் தகவல்களை பாதுகாத்து வைக்க வேண்டும்.
  • வழக்குகள் உரிய நேரத்தித்தில் விரைவாக விசாரிக்கப்பட வேண்டும். உரிய நேரத்தில் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தர வேண்டும்.
  • பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதி கிடைப்பதில் தாமதம் ஏற்படக் கூடாது. தவறுகள் நடப்பது கண்டுகொள்ளப்பட்டால் அதிகாரிகள் உரிய கடுமையான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறாக அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் தமிழகத்தில் 12 வயது சிறுமி ஒருவர் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகி குற்றவாளிகளால் கொலை செய்யப்பட்டார். அவரது கொலைக்கு தகுந்த ஆதாரங்கள் இல்லாததால் நீதிமன்றம் குற்றவாளிகளை விடுதலை செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

லோக்சபா தேர்தல் எதிரொலி: சென்னை தாம்பரம் to நெல்லைக்கு சிறப்பு ரயில்., தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு!!!

தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் லோக்சபா தேர்தல் வாக்குப்பதிவு, நாளை (ஏப்ரல் 19) நடைபெற உள்ளது. இதனால் சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் தங்கி இருப்பவர்கள்...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -