கிழிந்த, சேதமடைந்த நோட்டுகளை எப்படி மாற்றுவது? இத செஞ்சா போதும்? ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்!!!

0

இந்தியா முழுவதும் பல்வேறு இடங்களிலும் டிஜிட்டல் பரிவர்த்தனை அதிகரித்து வந்தாலும், இன்னும் பெரும்பாலான பகுதிகளில் சில்லறை புழக்கங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஏதேனும் அழுக்கடைந்த அல்லது கிழிந்த நோட்டுகள் இருக்கும் பட்சத்தில், அதனை எப்படி? மாற்ற வேண்டும் என்பது குறித்த விழிப்புணர்வு இல்லாமல் சிலர் உள்ளனர். அதன்படி கிழிந்த நோட்டுகளை மாற்றுவது குறித்த ரிசர்வ் வங்கி வழிகாட்டுதலை பார்க்கலாம்.

மக்களே குட் நியூஸ்.., இந்த நாளில் உள்ளூர் விடுமுறை.., மாவட்ட ஆட்சியர் உத்தரவு!!

ஏதேனும் கிழிந்த / சேதமடைந்த / அழுக்கடைந்த நோட்டு இருக்கும் பட்சத்தில், அருகாமையில் உள்ள பொதுத்துறை மற்றும் தனியார் துறை வங்கிகளில் கொடுத்து செல்லத்தக்க நோட்டுகளை பெற்றுக் கொள்ளலாம். அதேபோல் சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள ரிசர்வ் வங்கி அலுவலகங்களிலும் மாற்றிக் கொள்ளலாம் என அறிவுறுத்தி உள்ளனர். இதற்காக எவ்வித படிவத்தையும் பூர்த்தி செய்ய வேண்டும் என்பது கிடையாது.

 Enewz Tamil டெலிக்ராம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here