Sunday, April 28, 2024

உடுமலை சங்கர் வழக்கு – உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு!!

Must Read

உடுமலை சங்கர் வழக்கின் தீர்ப்பிற்கு எதிராக தமிழக அரசு சார்பாக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

உடுமலை சங்கர் வழக்கு:

கடந்த 2016 ஆம் ஆண்டு உடுமலைப்பேட்டையை சேர்ந்த சங்கர் என்பவர் கவுசல்யா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவரும் வெவ்வேறு சாதியை சார்ந்தவர்கள் இதனால், கவுசல்யா குடும்பத்தில் இவர்களது காதலுக்கு எதிர்ப்பு இருந்துள்ளது.

இந்த நிலையில், கெசல்யாவும் அவரது கணவர் சங்கரும் உடுமலை பேருந்து நிலையத்தில் இருந்துள்ளதை பார்த்த கவுசல்யா உறவினர்கள் மற்றும் அவரது தந்தை அந்த இடத்திலேயே சங்கரையும் இவரையும் தாக்கியுள்ளனர்.

ENEWZ வலைதள பக்கங்களுக்கு கிளிக் செய்யவும்

shankar and his wife kowsalya - kowsalya's father
shankar and his wife kowsalya – kowsalya’s father

சம்பவ இடத்திலேயே சங்கர் உயிர் இழந்துள்ளார் மேலும் கவுசல்யா சிறு காயங்களுடன் தப்பித்துள்ளார். கவுசல்யா தனது தந்தை மற்றும் அவருக்கு உதவி புரிந்தவர்கள் மீது புகார் அளித்தார்.

தீர்ப்பு:

இந்த வழக்கினை விசாரித்த நீதிபதிகள் கவுசல்யாவின் தந்தை மற்றும் 6 பேருக்கு துக்கு தண்டனை விதித்து இருந்தது. ஆனால், அவர்கள் சார்பில் மேல்முறையீடு மனு ஒன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் கொடுக்கப்பட்டது.

இதனை விசாரித்த நீதிபதிகளான சத்தியநாராயணன் மற்றும் நிர்மல் குமார் ஆகியோர் அமர்வு கவுசல்யா தந்தை சின்னசாமியை விடுதலை செய்ய உத்தரவிட்டது. மற்ற 5 பேருக்கு ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.

கிடுகிடுவென உயரும் தங்கத்தின் விலை – பொதுமக்கள் அதிர்ச்சி!!

shanker murder case judgement
shanker murder case judgement

இதனை அறிந்த கவுசல்யா இந்த தீர்ப்பிற்கு எதிராக மேல்முறையீடு செய்ய இருப்பதாக தெரிவித்து இருந்தார். அதன்படி தற்போது இந்த தீர்ப்பிற்கு எதிராக தமிழக அரசு உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

2024 மே மாதத்திற்கான வங்கி விடுமுறை பட்டியல் வெளியீடு., எவ்ளோ நாட்கள் தெரியுமா? முழு விவரம் உள்ளே!!!

பொதுத்துறை மற்றும் தனியார் துறை வங்கி நிறுவனங்கள், வாடிக்கையாளர்களின் நலன் கருதி பல்வேறு டிஜிட்டல் வசதிகளை அறிமுகம் செய்து வருகின்றனர். ஆனாலும் இன்னும் ஒரு சில...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -