7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த முதியவர் – ஆயுள் முழுக்க கம்பி என்ன வைத்த மதுரை நீதிமன்றம்!!

0

தற்போதைய சமுதாயத்தில் சிறு குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி வருகின்றனர். இதற்கு அரசு கடும் நடவடிக்கை எடுத்து வந்த போதிலும், இது மாதிரியான துயர சம்பவங்கள் அரங்கேறி கொண்டு தான் இருக்கிறது. குறிப்பாக வயதான முதியவர்கள் இந்த குற்றங்களை செய்து வருகின்றனர். அந்த வகையில் மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே ராஜா (எ) ராஜாராம் (57) என்பவர் ஒரு 7 வயது சிறுமியை டிவியில் படம் பார்க்காமல் என்று அழைத்து சென்று அந்த சிறுமியிடம் பாலியல் வன்புணர்வை தூண்டியுள்ளார்.

அதை தனது பெற்றோர்களிடம் அந்த சிறுமி கூற, அவர்கள் திருமங்கலம் போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்த நிலையில், ராஜாவை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதனை தொடர்ந்து இந்த வழக்கு நேற்று நீதிபதி முத்து குமரவேல் முன்னிலையில் விசாரணைக்கு வந்த நிலையில், ராஜாராமுக்கு வாழ்நாள் ஆயுள் தண்டனை மற்றும் 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here