தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது?? அமைச்சர் செங்கோட்டையன் முக்கிய ஆலோசனை!!

0

தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை பணிகள் தொடங்கி விட்ட நிலையில், பள்ளிகளை திறப்பது குறித்து அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை நடத்தி வருகிறார். இதில் கல்வித்துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர்.

பள்ளிகள் திறப்பு:

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக 4 மாதங்களுக்கு மேலாக பள்ளிகள் மூடப்பட்டு உள்ளன. வழக்கமாக கோடை விடுமுறை முடிந்து ஜூன் மாதம் திறக்கப்படும் பள்ளிகள் இம்முறை கொரோனா பாதிப்பு காரணமாக மூடப்பட்டு உள்ளன. இருப்பினும் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக ஆன்லைன் மற்றும் தொலைக்காட்சி வாயிலாக பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன. ஆனால் மறுபுறம் பள்ளிகள் தாமதமாக திறக்கப்பட்டால் பாடங்கள் குறைப்பு, காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகள் ரத்து உள்ளிட்ட முடிவுகள் எடுக்கப்படலாம் என கூறப்படுகிறது.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் இணைய கிளிக் பண்ணுங்க!!

minister sengottaiyan
minister sengottaiyan

மேலும் நாடு முழுவதும் டிசம்பர் மாதம் வரை பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட வாய்ப்பு இல்லை என மத்திய உயர்கல்வித்துறை செயலாளர் தெரிவித்து உள்ளார். ஆன்லைன் கல்வியை ஊக்குவிக்கவும் மத்திய அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட உள்துறை அமைச்சர் அமித்ஷா!!

தமிழகத்தில் உள்ள அரசு, தனியார் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள் அனைத்திலும் நேற்று முதல் மாணவர் சேர்க்கை தொடங்கி உள்ளது. இந்த நடவடிக்கைகள் காரணமாக விரைவில் பள்ளிகள் திறக்கப்படலாம் என கூறப்படுகிறது. இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டு உள்ளார். இதில் பள்ளிகள் திறப்பு குறித்து முடிவு செய்யப்படும் என தகவல்கள் வெளியாகி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here