Monday, May 6, 2024

ஸ்ரீரங்கத்தில் தொடங்கியது ‘வைகுண்ட ஏகாதேசி’ வைபோகம் – டிச.25 இல் சொர்க்க வாசல் திறப்பு!!

Must Read

தமிழ்நாட்டில் அமைந்துள்ள வைணவத்தலங்களில் முதன்மையாகக் கருதப்படுகின்ற ஸ்ரீரங்கத்தில் உள்ள ரங்கநாத சுவாமி கோவிலில் வைகுண்ட ஏகாதேசி விழா 21 நாட்கள் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இன்று முதல் ஜனவரி 3 வரை பகல்பத்து, இராப்பத்து என்று இரு பகுதிகளாகக் கொண்டாடப்படுகிறது. டிசம்பர் 25-தேதி சொர்க்கவாசல் திறப்பு நடைபெறவுள்ளது.

பூலோக வைகுண்டம்:

மார்கழி மாதத்தில் வரும் வளர்பிறை பதினோராம் நாள் இந்துக்களால் வைகுண்ட ஏகாதசி எனக் கொண்டாடப்படுகிறது. வைணவர்கள் தாம் வழிபடும் திருமாலின் இருப்பிடமாகக் கருதும் வைகுண்டத்தின் கதவுகள் இன்று திறக்கப்படுவதாக நம்புகின்றனர். இந்நாளின் முன்னிரவில் தூங்காமல் இருந்து திருமாலின் புகழ்பாடி கோவில் செல்வர். விடிகாலையில் பெருமாள் கோவில்களில் பொதுவாக வடக்குதிசையில் என்றும் மூடப்பட்டிருக்கும் அது இன்று மட்டுமே திறக்கும். அதனை “சொர்க்க வாயில்” என்றழைக்கப்படும் அதன் வாயில் வழியே சென்று இறைவனை வழிபடுவர்.

“பாண்டியன் ஸ்டோர்ஸ்” முல்லை வேடத்தில் இனி யார்?? தொடர்ந்து பரவிவரும் வதந்திகள்!!

பூலோக வைகுண்டம் எனப்படும் ஸ்ரீரங்கம் திருக்கோவிலில் இன்று முதல் 24ஆம் தேதி வரை பகல் பத்து உற்சவமும் 25ஆம் தேதி முதல் ஜனவரி 3ஆம் தேதி வரை இராப்பத்து உற்சவமும் நடைபெறும். 25ஆம் தேதி அதிகாலை 4.45 மணியளவில் வைகுண்ட ஏகாதசியின் முக்கிய நிகழ்வான சொர்க்கவாசல் திறப்பு நடைபெறும்.

ஏகாதசி நாள் சிறப்பு:

இந்துக்கள் ஒவ்வொரு ஏகாதசி நாளிலும் உண்ணாநோன்பிருந்து இறைவனை வழிபடுவதால் தங்களின் பாவச்செயல்கள் மன்னிக்கப்பட்டு சங்கடங்கள் தீரும் என நம்புகின்றனர். விஷ்ணுபுராணம் என்ற நூலில் அனைத்து ஏகாதசி நாட்களிலும் உண்ணாநோன்பு இருந்து பெறும் பயனை வைகுண்ட ஏகாதசி அன்று இருக்கும் ஒருநாள் விரதத்தால் பெறலாம் எனக் கூறப்பட்டுள்ளது.

Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

பகல்பத்து உற்சவத்தின் முதல் நாளான இன்று திருமொழி திருவிழா தொடங்கியது. நம்பெருமாள் காலை 7 மணிக்கு மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு காலை 7.45 மணிக்கு வந்தடைந்தார். காலை 8.15 மணி முதல் மதியம் 1 மணிவரை ஐயர்கள் நம்பெருமாள் முன் நின்று நாலாயிரம் திவ்யப்பிரபந்த பாடல்களை இசையுடன் பாடுவார்கள். பிறகு மாலை 6.30 மணிக்கு அர்ச்சுன மண்டபத்தில் இருந்து நம்பெருமாள் புறப்பட்டு இரவு 9.45 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைவார். இதே போல் ஒவ்வொரு நாளும் நம்பெருமாள் வெவ்வேறு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிப்பார்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

TNPSC Group 4 பொதுத்தமிழ் முக்கிய கேள்விகள் Part 3

https://www.youtube.com/watch?v=7uGPqI1IYJk Enewz Tamil WhatsApp Channel  TNPSC குரூப் 2, 2ஏ தேர்வர்களே., Course Pack உடன் இதெல்லாம் இலவசம்? உடனே முந்துங்கள்!!!
- Advertisement -

More Articles Like This

- Advertisement -