IPL 2024: CSK அதிர்ச்சி தோல்வி.. ட்ரெண்டிங்கில் ருத்துராஜின் ஓபன் டாக்!!

0

இந்தியன் பிரீமியர் லீக் தொடர் கடந்த மார்ச் 22ம் தேதி முதல் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரின் 49 வது லீக் போட்டியில் சென்னை அணி, பஞ்சாப் கிங்ஸ் அணியுடன் பலப்பரீட்சை நடத்தியது. இதில் முதலில் விளையாடிய சென்னை 162 ரன்கள் குவித்தது. அதன் பிறகு களம் இறங்கிய பஞ்சாப் அணி 17.5 ஓவர் முடிவில் ,163 ரன்கள் அடித்து, 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்த நிலையில் சென்னை அணியின் தோல்வி குறித்து அந்த அணியின் கேப்டன் ருத்துராஜ் கெய்க்வாட் முக்கிய கருத்தை கூறியுள்ளார். அதாவது பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் நாங்கள் பேட்டிங் செய்யும்போது ஆடுகளம் மிகவும் கடினமாக இருந்தது. ஒருவேளை நாங்கள் 200 ரன்களுக்கு மேல் எடுத்து இருந்தால் போட்டு இன்னும் கடுமையாக இருந்திருக்கும். அதுமட்டுமின்றி பனியின் தாக்கமும் அதிகமாக இருந்தது. மீதமுள்ள 4 போட்டியிலும் சிறப்பாக ஆடி வெற்றி பாதைக்கு திரும்ப முயற்சிப்போம் என தெரிவித்துள்ளார்.

Enewz Tamil WhatsApp Channel 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here