Tuesday, May 7, 2024

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் கைதான 7 பேரை விடுவிக்கக்கோரி உத்தரவிடுக – ஆளுநருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்!!

Must Read

இன்று திராவிட முன்னேற்ற கழக தலைவரான முக ஸ்டாலின் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவர்களை நேரில் சென்று சந்தித்தார். அங்கு மு.க.ஸ்டாலின் ஆளுநருக்கு ஒரு கடிதம் ஒன்றை வழங்கினார். அதில் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் கைதான 7 பேரை விடுக்கக்கோரி ஆளுநர் உத்தரவு அளிக்குமாறு கோரி உள்ளார்.

ஆளுநர் மாளிகை

இன்று திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் மு.க.ஸ்டாலின், கழகத்தின் பொது செயலாளர் திரு.துரைமுருகன், துணை பொது செயலாளர் முனைவர் க.பொன்முடி, கழகத்தின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்.பி மற்றும் கழக உயர்நிலைச் செயல்திட்ட உறுப்பினரான திரு.தயாநிதி மாறன் ஆகியோர் ஆளுநர் மாளிகைக்கு சென்றனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

mk stalin speak with governor
mk stalin speak with governor

அங்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவர்களை சந்தித்து திராவிட கழக தலைவர் முக ஸ்டாலின் ஆளுநருக்கு கடிதம் ஒன்றை வழங்கினார்.

மு.க.ஸ்டாலின் கடிதம்

மு.க.ஸ்டாலின் ஆளுநருக்கு வழங்கிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது என்னவென்றால், முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் கைதான 7 பேரை விடுவிக்க உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலையில் பேரறிவாளன், திருமதி.நளினி, திரு.ஸ்ரீகரன், திரு.சாந்தன், திரு.ஜெயக்குமார், ராபர்ட் பாயஸ் மற்றும் திரு.பி.ரவிச்சந்திரன் ஆகியோர் 29 ஆண்டுக்கு மேல் சிறைத்தண்டனை அனுபவித்து வருகின்றனர் என்பதை ஆளுநருக்கு தெரிவித்துள்ளார்.

Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

மாண்புமிகு உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதலின் படி தி.மு.க கொடுத்த அழுத்தத்தாலும், தமிழ்நாடு அமைச்சரவை இந்த வழக்கை பரிசீலித்து 7 பேரை உடனடியாக விடுவிக்கவும் மற்றும் ஆயுள் தண்டனை குறைக்கவும் 2018 ஆம் ஆண்டு பரிந்துரை செய்தது அமைச்சரவை. இந்த வழக்கு குறித்து ஒவ்வொரு ஆண்டும் போராடிகொண்டே வந்தனர் ஆனால் இன்னும் அதற்கான தீர்வு கிடைக்கவில்லை. ஆகையால் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் கைதான 7 பேரை உடனே விடுவிக்கக்கோரி ஆளுநர் உத்தரவு அளிக்கவேண்டும் என்று ஸ்டாலின் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

TNPSC குரூப் 4 எழுத்துத் தேர்வுக்கு தயாராகிட்டீங்களா? இதுவும் முக்கியம்? மிஸ் பண்ணிடாதீங்க!!!

TNPSC குரூப் 4 எழுத்துத் தேர்வுக்கு தயாராகிட்டீங்களா? இதுவும் முக்கியம்? மிஸ் பண்ணிடாதீங்க!!! தமிழக அரசுத்துறைகளில் 6,244 இளநிலை உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கான 'குரூப் 4'...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -