வாய் துர்நாற்றத்தில் இருந்து முழுமையாக தப்பிக்க வேண்டுமா?? எளிமையான சில டிப்ஸ் இதோ!!

0

சிலருக்கு அல்சர் மற்றும் சரியாக பராமரிப்பு இல்லாத காரணத்தால் வாய் துர்நாற்றம் ஏற்படுகிறது. அல்சர் இருப்பவர்களுக்கு வயிற்றில் புண் இருப்பதால் என்னதான் வாயை சுத்தமாக வைத்து கொண்டாலும் துர்நாற்றம் வீசும். ஒருவர் பார்ப்பதற்கு அழகாக உடையணிந்து ரிச் ஆக இருந்தாலும் வாயில் துர்நாற்றம் வீசும்பொழுது அவரின் மரியாதை குறைந்து விடுகிறது. இதற்கு சுலபமான சில டிப்ஸ் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

துர்நாற்றத்தை தடுக்க:

தினமும் இரண்டு வேலை பல் துலக்க வேண்டும். பல்துலக்கிய பின் நிறைய தண்ணீர் கொண்டு வாயை கொப்பளிக்கவும். வெதுவெதுப்பான நீரில் சிறிது உப்பு கலந்து கொப்பளிக்க வேண்டும். சாப்பிட்ட பின் உணவு எதுவும் வாயில் தங்காதவாறு வாயை கொப்பளிக்க வேண்டும்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

சில ஆண்கள் சிகரெட் பிடிப்பதால், அருகில் வந்தாலே வாய் துர்நாற்றம் வீசும். சிகரெட் பழக்கம் உள்ளவர்கள் சிகரெட் பிடித்த பிறகு வாயை நன்றாக கொப்பளித்துவிட்டு ஏலக்காய் வாயில் போட்டு கொண்டால் துர்நாற்றம் வீசாது.

புதினா:

புதினா இலை மிகவும் நறுமணம் உடையது. புதினா இலைகளை நன்றாக காயவைத்து பொடி செய்து தினமும் பல் துலக்கி வந்தால் வாய் துர்நாற்றம் இருக்காது. எப்பொழுதும் வாய் மற்றும் மூளை புத்துணர்ச்சியாக இருக்கும். உதடு கருப்பாக இருப்பவர்களும் தேனுடன் கலந்து தேய்த்தால் சிவப்பாக மாறும்.

எலுமிச்சை:

எலுமிச்சை பழச்சாறில் சிறிது உப்பு மற்றும் வெதுவெதுப்பான தண்ணீர் கலந்து அடிக்கடி வாய் கொப்பளிக்க வாயில் உள்ள கிருமிகள், மஞ்சள் படலம், துர்நாற்றம் நீங்கும். மேலும், உணவு சாப்பிட்ட பிறகு ஒரு ஸ்பூன் எலுமிச்சை பழச்சாறு குடிக்க துர்நாற்றம் இருக்காது. அல்சர் உள்ளவர்கள் எலுமிச்சை உணவிலோ, ஜூஸ் ஆகவோ எடுத்துக்கொள்ள கூடாது.

தேங்காய் எண்ணெய்:

அல்சர் இருப்பதால் பலருக்கு வாயில் ஒரு விதமான கெட்ட வாசனை வரும். தினமும் காலையில் இயற்கை பல்பொடி கொண்டு பல்துலக்கி விட்டு ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணையை வாயில் ஊற்றி 15 நிமிடம் நுரை வரும்வரை நன்றாக கொப்பளிக்க வேண்டும். தினமும் ஆயில் புல்லிங் செய்வதால் எண்ணற்ற நன்மைகள் உள்ளன பல நோய்கள் விரட்டப்படுகிறது.

துளசி இலை:

துளசி மருத்துவ குணம் உள்ளது. வாய் துர்நாற்றம், சளி உள்ளவர்கள் 10 துளசி இலையை சுத்தம் செய்து வாயில் போட்டு மென்று சாப்பிடுவதன் மூலம் துர்நாற்றம் வீசாது. பேக்கிங் சோடாவை தண்ணீரில் கலந்து வாயை அடிக்கடி கொப்பளிப்பதன் மூலம் படிப்படியாக சரியாகிவிடும். இவ்வாறு, வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே வாய் துர்நாற்றத்தை சுலபமாக போக்க முடியும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here