தமிழக அரசு மாணவர்களே.., விரைவில் இத்திட்டம் அமலுக்கு வரும்.., வெளியான அறிவிப்பு!!!

0
தமிழக அரசு மாணவர்களே.., விரைவில் இத்திட்டம் அமலுக்கு வரும்.., வெளியான அறிவிப்பு!!!
தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளை சர்வதேச அளவிற்கு தரம் உயர்த்த பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. அதன்படி அரசு பள்ளி மாணவர்களுக்கு கணினி மயமாக்கப்பட்ட வகுப்பறை, இலவச இணைய சேவை போன்றவற்றை பள்ளிக்கல்வித்துறை மேம்படுத்தி வருகிறது. அதன்படி புதிய சேவையை அறிமுகப்படுத்த உள்ளதாக ஓர் அறிவிப்பு வெளியாகி உள்ளது.
அதாவது தமிழ்நாட்டின் அனைத்து அரசு பள்ளிகளிலும் 100mbps வேகம் கொண்ட இணைய சேவை வழங்கும் பணிகள் இம்மாத இறுதிக்குள் நிறைவடையும் எனத் தெரிவித்துள்ளது. இதன் மூலம் மாணவர்கள் கடினமான பாடப் பொருட்களை எளிமையாக காணொலி வாயிலாக கற்பதற்கும், கற்ற பாடங்களை ஆன்லைன் மதிப்பீடுகள் மூலமாக பயிற்சிகள் மேற்கொள்ளவும் வழிவகை செய்யப்படும் என கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here