வெள்ளை நிற உடையில் தேவதையாய் காட்சி அளிக்கும் வெண்பா – சொக்கிப்போன ரசிகர்கள்!!

0
சின்னத்திரை தொடரில் இருந்து வெளியேறிய பாரதி கண்ணம்மா வெண்பா - ரசிகர்கள் ஷாக்!!

தற்போது வெள்ளித்திரை முதல் சின்னத்திரை வரை போட்டோஷூட் என்பது ட்ரெண்ட் ஆகி வருகிறது. படவாய்ப்புகளுக்காக இப்படி ஒரு யுக்திகளை நடிகைகள் யாவரும் கடைப்பிடித்து வருகின்றனர். அந்த வகையில் பாரதி கண்ணம்மா சீரியல் வில்லியான ஃபரீனா வெள்ளை நிற உடையில் போஸ் கொடுத்துள்ளார். அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

ஃபரீனா

திரையுலகில் தற்போது நாயகன் நாயகியை காட்டிலும் வில்லத்தனமான கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் தரப்பட்டு வருகிறது. பெரும்பாலும் ரசிகர்களுக்கு அந்த வில்லன்களையே பிடித்தும் போகிறது. தற்போது வரும் படங்களில் எல்லாம் அழகான வில்லன்களை மட்டுமே பார்க்க முடியாது.

Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

அந்த காலத்தில் வில்லன்களை பார்த்தாலே பயம் வரும். ஆனால் இப்பொழுதோ வில்லன்களை தான் பலரும் கிரஷ் என்று கூறிக்கொண்டுள்ளனர். இது வெள்ளித்திரையில் வில்லன் நடிகர்கள் என்றால் சின்னத்திரையில் வில்லி நடிகைகளுக்கே மவுசு அதிகம்.

அனைத்து தொலைக்காட்சியிலும் இப்பொழுது அழகிய நடிகைகளையே வில்லியாக அறிமுகப்படுத்துகின்றனர். இது மக்களுக்கும் பிடித்து போய் விடுகிறது. அந்த வகையில் ஒருவர் தான் பாரதி கண்ணம்மாவில் நடிக்கும் வெண்பா. இவர் ஆரம்பத்தில் சன் டிவியில் தொகுப்பாளினியாக பணிபுரிந்தார். இவருக்கென்று தனி ரசிகர்களும் இருந்தனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அதன் பிறகு தான் இவருக்கு பாரதி கண்ணம்மா சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. மேலும் அந்த சீரியலில் பாதியில் தான் அவர் நுழைந்தார். ஆனால் இப்பொழுது அனைவரின் பேச்சும் வெண்பா பற்றி தான். இதனை நாட்கள் நாம் பார்த்திராத அளவுக்கு படு வில்லியாகவே உள்ளார் வெண்பா.

ஒரு கதாபாத்திரத்தின் முக்கியத்துவமே அதில் ஒன்றி நடிப்பது தான். அதனை சரியாகவே செய்து வருகிறார். அவரது பேச்சும், ஏளன சிரிப்பும் மக்களை வெகுவாக ரசிக்கவும் வைக்கிறது. மேலும் அவர் வெளியே வந்தாலே ஏன் இப்படி பண்ணீங்க பாவம் கண்ணம்மா என்று திட்டு தீர்க்கின்றனராம்.

அந்த அளவிற்கு இவரின் புகழ் அனைத்து இடங்களிலும் பரவி வருகிறது என்றே சொல்லலாம். தற்போது அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் அழகிய வெள்ளை நிற உடையில் தேவதை போல காட்சியளிக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here