புதிய வடிவில் கொள்ளையடிக்கும் கும்பல்., இந்த நம்பரில் இருந்து மெசேஜ் வருதா? எச்சரிக்கை!!!

0
புதிய வடிவில் கொள்ளையடிக்கும் கும்பல்., இந்த நம்பரில் இருந்து மெசேஜ் வருதா? எச்சரிக்கை!!!

இன்றைய காலகட்டத்தில் ஆன்லைன் வழியாக நடைபெறும் மோசடி செயல்கள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் தற்போது பெங்களூரை சேர்ந்த ஒரு பெண், ‘தான் ஒரு மிகப்பெரிய நிதி மோசடியில் இருந்து தப்பித்து விட்டேன்’ என எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில் ‘எனக்கு தெரியாத நம்பரில் இருந்து வயதானவர் போல ஒருவர், செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார். உன் அப்பாவின் வங்கி கணக்கிற்கு பணம் அனுப்ப முடியவில்லை. எனவே உன் நம்பருக்கு பணம் அனுப்பவே, போன் பண்ணி உறுதி செய்து கொண்டேன் எனக் கூறினார். பின்னர் சில நிமிடங்களிலே மீண்டும் தொடர்பு கொண்ட அந்த நபர், ரூ.3,000க்கு பதிலாக ரூ.30,000 என தவறாக அனுப்பி விட்டேன்.

தற்போது மருத்துவமனையில் இருப்பதால், அந்தப் பணம் அவசரமாக தேவைப்படுகிறது என கூறினார். பின்னர் பணம் பெறப்பட்ட எஸ்எம்எஸ்-ஐ பார்த்த போது, பத்து இலக்க போன் நம்பரில் இருந்து மெசேஜ் வந்து இருந்தது. நான் சுதாரித்துக் கொண்டு வங்கி கணக்கை லாகின் செய்து பார்த்தபோது, பணம் எதுவும் பெறவில்லை. இப்படியாக புதிய வடிவில் மோசடி நடந்து வருவதால், பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.” என தெரிவித்துள்ளார்.

 Enewz Tamil இன்ஸ்டாகிராம்

வெளியான ராயன்  படத்தின் அப்டேட்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட படக்குழு!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here