Saturday, May 4, 2024

சுவையான Egg Chilli – எப்படி செய்றதுன்னு பாப்போம்..!

Must Read

நாம் அன்றாட சாப்பிடும் உணவுகளில் முட்டையை சேர்த்துக்கொள்வது மிகவும் நல்லது. இதனை குழந்தைகளுக்கு கொடுப்பதன் மூலம் ஊட்டச்சத்துக்களை பெறுகின்றனர்.மேலும் முட்டையில் புரோட்டீன்கள், வைட்டமின்கள், அமினோ ஆசிட்டுகள், ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட்டுகள்ஆகிய சத்துக்கள் நிறைந்துள்ளன. இப்பொது Egg Chillli எப்படி செய்வது என்று பாப்போம்.

தேவையான பொருட்கள்

egg chilli
egg chilli

முட்டை, வெங்காயம், தக்காளி, இஞ்சி, பச்சை மிளகாய், மிளகுத்தூள், மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், சோளமாவு, கரம் மசாலா, உப்பு தேவையான அளவு, எண்ணெய்.

செய்முறை

முதலில் முட்டையை ஒரு கிண்ணத்தில் ஊற்றி உப்பு மற்றும் சிறிது மஞ்சள்தூள் மிளகாய்த்தூள் சேர்த்து கலக்கி கொள்ளவும். அதனை ஒரு பாத்திரத்தில் ஊற்றி இட்லி வேகவைப்பது போல வேக வைக்கவேண்டும். அதாவது ஒரு அகன்ற பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி முட்டையை ஊற்றி வைத்த பாத்திரத்தை அதனுள் வைத்து மூடிவைக்க வேண்டும்.

egg chilli
egg chilli

10 நிமிடம் கழித்து அதனை எடுத்து சதுரமாக வெட்டிக்கொள்ள வேண்டும். அதன்பின் ஒரு பாத்திரத்தில் சோளமாவு மாற்றும் மைதா மாவு சேர்த்து அதனுடன் மிளகாய்த்தூள், மிளகுத்தூள் மற்றும் சிறிது உப்பு சேர்த்து தண்ணீர் ஊற்றி மாவு பதத்திற்கு கலந்து கொள்ளவும். அதில் சதுரமாக வெட்டி வைத்த முட்டை துண்டுகளை சேர்த்து எண்ணெயில் போட்டு பொறித்து எடுக்கவும்.

egg chilli
egg chilli

பிறகு வாணலியில் எண்ணெய் ஊற்றி அதில் பச்சை மிளகாய் சேர்த்து வதங்கியதும் இஞ்சி சேர்ந்து பின்பு வெங்காயம், தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும். அதன்பின் அதில் கரம் மசாலா, மிளாகாய்த்தூள் சேர்த்து பச்சை வாடை போகும் வரை நன்கு வதக்கி சிறிது தண்ணீர் ஊற்றி தண்ணீர் சுண்டியதும் பொரித்து வைத்த முட்டையை அதில் சேர்த்து நன்கு வதக்கி இறக்கினால் முட்டை சில்லி தயார்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

PF சந்தாதாரர்களுக்கு ஜாக்பாட்., ரூ.50,000 வரையிலும் போனஸ் கிடைக்கும்? EPFO-வின் மாஸ் விதிகள்!!!

அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரியும் ஊழியர்களின் ஓய்வூதிய கால நலன் கருதி, மாதாந்திர ஊதியத்தில் PF தொகை பிடித்தம் செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு பிடித்தம்...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -