Friday, May 17, 2024

கனமழையால் குற்றால அருவியில் வெள்ளப் பெருக்கு – குளிக்க தடை விதிப்பு!!

Must Read

தொடர் கனமழை காரணமாக குற்றால அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. அருவியிலிருந்து அளவுக்கு அதிகமாக தண்ணீர் கொட்டுகிறது. மேலும் தொடர்ந்து மழை பெய்து கொண்டே இருக்கும் காரணத்தால் அருவிகளில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.

வெள்ளப்பெருக்கு

தமிழ்நாடு முழுவதும் மழை பெய்து வரும் நிலையில் தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றாலம், செங்கோட்டை மற்றும் அதை சுற்றியுள்ளப்பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் குற்றாலத்தில் உள்ள மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் மற்றும் சில அருவிகளிலிருந்து நீர்வரத்து அதிகமாக கொட்டுகிறது.

Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

flood from falls
flood from falls

மேலும் மேற்கு தொடர்ச்சி மலைகளிலும் தொடர்ந்து மழைபெய்து வருவதால் மெயின் அருவியிலிருந்து அளவுக்கு அதிகமாக நீர்வருவதால் வெள்ளப்பெருக்காக மாறியது.

குளிக்க தடை

குற்றால அருவிலிருந்து அளவுக்கு அதிகமான நீர்வரத்து வருவதால் குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஏற்கனவே கொரோனா காரணமாக அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்ட நிலையில் தற்போது அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

fivefalls kutralam
fivefalls kutralam

கனமழை தொடர்ந்து பெய்து வருவதால் மேலும் வெள்ளப்பெருக்காக மாறும் அபாயம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

குற்றால அருவிகளில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு., 16 வயது சிறுவன் உயிரிழப்பு? வெளியான அதிர்ச்சி தகவல்!!!

கடந்த சில தினங்களாக தமிழகத்தில் நெல்லை, தென்காசி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சாலைகளில் தண்ணீர் வெள்ளம் போல்...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -