‘லாஸ்லியாவிடம் பேசினேன், மிகவும் நொறுங்கி விட்டார்’ – வனிதாவின் ட்விட்டால் வருத்தத்தில் ரசிகர்கள்!!

0

இந்த 2020 இல் நாம் எதிர்ப்பாராத பல இழப்புகளை தொடர்ந்து சந்தித்து வருகிறோம். மேலும் தற்போது பிக் பாஸ் லாஸ்லியாவின் தந்தை மரியநேசனின் இழப்பு அவரது ரசிகர்கள் பலரையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது. மேலும் வனிதா இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

லாஸ்லியா

இலங்கையில் செய்தி தொகுப்பாளராக இருந்தவர் லாஸ்லியா. இவருக்கு பிக் பாஸில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைக்கவே அதில் கலந்து  கொண்டார். இந்த நிகழ்ச்சி அவருக்கு பெரும் வாய்ப்பாக அமைந்தது. மேலும் கவின் மீது இவருக்கு காதலும் உருவானது. இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் கவின் லாஸ்லியா பற்றியே பல செய்திகள் வெளியாகின.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

losliya
losliya

இந்நிலையில் 70வது நாள் லாஸ்லியாவின் அப்பா மரியநேசன் பிக் பாஸ் வீட்டிற்கு வந்தார். 10 வருடத்திற்கு பிறகு தன் தந்தையை காணும் லாஸ்லியா இன்ப அதிர்ச்சியாகி கதறி அழுதது இன்னும் நம் கண் முன் தான் நிற்கிறது. மேலும் லாஸ்லியா நடந்து கொண்டதற்கு அவரின் அப்பா அவரிடம் கோவமும் பட்டார். ஆனால் அதன் பிறகு அவர் கனடா சென்று விட்டார்.

பல வருடங்களாக அப்பாவை பார்க்காமல் ஏங்கி தவித்த லாஸ்லியாவிற்கு அவர் இறப்பு கண்டிப்பாக பேரிடியாக தான் இருந்திருக்கும். இந்நிலையில் பலரும் லாஸ்லியாவிற்கு ஆறுதல் அளித்து வருகின்றனர். மேலும் வனிதா ஒரு ட்விட் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

அதில் லாஸ்லியா அப்பா இறந்த செய்தியை கேள்விப்பட்டதும் மிகவும் கவலையடைந்தேன். இது ஒரு கொடுமையான செய்தி. எப்படி தாங்கிக்கொள்ள போகிறார்களோ. வாழ்க்கையை கணிக்க முடியவில்லை. குடும்பத்தை காப்பாற்றி வந்தார். இப்பொழுது 3 மகள்கள் வேறு இருக்கின்றனர்.

மனதுடைந்து விட்டேன். அவரது உடலை கொண்டு வருவார்கள் என்று நம்புகிறேன் என்றும் கூறியுள்ளார். ‘மேலும் லாஸ்லியாவிடம் பேசினேன், மிகவும் அழுகிறார், அவர் தைரியமாக இருப்பார், இலங்கைக்கு செல்ல முயற்சித்து வருகிறார். விஜய் டிவி அவருக்கு பக்கபலமாக உள்ளது’ என்று பதிவிட்டுள்ளார்.

இதனால் லாஸ்லியா ரசிகர்கள் அவருக்கு நன்றி தெரிவித்துள்ளனர். மேலும் நீண்ட வருடங்களாக அப்பாவின் முகத்தை பார்க்காத லாஸ்லியாவிற்கு கடைசியாக ஒருமுறை பார்க்கும் வாய்ப்பு கிடைக்கட்டும் என அவரது ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here