Monday, May 13, 2024

இந்தியாவில் தீபாவளி விற்பனை ரூ.72 ஆயிரம் கோடி – நஷ்டத்தில் சீனா!!

Must Read

இந்தியாவில் இந்தமுறை சீன பட்டாசுகள் மற்றும் எந்தவித பொருட்களையும் பொதுமக்கள் வாங்காததால் தீபாவளி விற்பனை ரூ.72 ஆயிரம் கோடியாக உயர்ந்துள்ளது. சீன தயாரிப்பு குறைந்த விலையில் கிடைப்பதால் மக்கள் அதை விரும்பி வாங்குவார்கள். ஆனால் இந்தமுறை சீன பொருட்களை புறக்கணித்ததில் பெரிய நஷ்டத்தை அடைந்தது சீன நாடு.

தீபாவளி விற்பனை:

இந்தியாவில் இந்தமுறை சீன பொருட்களை வாங்காததால் தீபாவளி விற்பனை ரூ.72 ஆயிரம் கோடியாக அதிகரித்துள்ளது. சீன பொருட்கள் உலகெங்கும் பிரபலமாக இருப்பதால் மக்கள் அதனை விரும்பி வாங்குவார்கள். ஆனால் இந்த நிலை இன்று இல்லை. கடந்த ஜூன் மாதம் சீன வீரர்கள் இந்திய எல்லைக்குள் நுழைய முயன்றபோது நம் வீரர்கள் தடுத்து நிறுத்தி பின்வாங்க செய்தனர். அப்போது சீன வீரர்களுடன் ஏற்பட்ட சண்டையில் 20 இந்திய வீரர்கள் வீர மரணமடைந்தனர்.

Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

இந்த சம்பவம் நாடு முழுவதும் கொதிப்பை ஏற்படுத்தியது. எனவே சீன பொருட்களை இந்தியர் அனைவரும் யாரும் வாங்கக்கூடாது அதனை புறக்கணிக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலைத்தள வாயிலாக தொடர்ந்து தகவல்களை பகிர்ந்து கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில் இந்தியாவில் சீன நாட்டின் சம்மந்தமான எல்லா பொருட்களையும் இறக்குமதி செய்ய தடை செய்து உள்ளார்கள். இதன் விளைவு தீபாவளி அன்று தெரிய வந்தது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்தியாவில் சீன பொருட்களை தடை செய்ததால், முக்கிய நகரங்களில் தீபாவளி பண்டிகை காலத்தில் மட்டும் ரூ.72 ஆயிரம் கோடி விற்பனை நடைபெற்றுள்ளது. அதே சமயம் சீன பொருட்களை புறக்கணித்ததால் சீனாவுக்கு ரூ.40 ஆயிரம் கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை, பெங்களூர், கொச்சி போன்ற 20 நகரங்களை விநியோக நகரங்களாக எடுத்துக் கொண்டு தீபாவளி பண்டிகை கால விற்பனை தொடர்பாக ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. அதில் இந்த தகவல் வெளியானது.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

தமிழகத்தில் எம்.பி. செல்வராஜ் காலமானார்., முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கல்!!!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகக் குழு உறுப்பினரான செல்வராஜ் (வயது 67) அவர்கள், ஏற்கனவே சிறுநீரக மாற்று அறுவை செய்து, அவ்வப்போது சிகிச்சை பெற்று வந்தார்....
- Advertisement -

More Articles Like This

- Advertisement -