ட்ராக் பெஸ்ட் 2024: இந்திய வீராங்கனை தீக்சா புதிய சாதனை.. ரசிகர்கள் வாழ்த்து மழை!!

0
ட்ராக் பெஸ்ட் 2024: இந்திய வீராங்கனை தீக்சா புதிய சாதனை.. ரசிகர்கள் வாழ்த்து மழை!!

இந்திய விளையாட்டு வீரர்கள்  சிறப்பாக செயல்பட்டு தனித்துவமான சாதனைகளை படைத்து அசத்தி வருகின்றனர். அந்த வகையில் தற்போது அமெரிக்காவில் டிராக் பெஸ்ட் 2024  தடகள போட்டிகள் நடைபெற்று வருகின்றது. அதில், பெண்களுக்கான 1,500 மீட்டர் ஓட்ட பந்தயத்தில் அமெரிக்காவின் கிறிஸ்சி கியர் 4 நிமிடங்கள் 3.65 வினாடிகளில் பந்தய தூரத்தை கடந்து முதலிடத்தை பிடித்துள்ளார் .

TNPSC குரூப் 4 தேர்வர்களே., எழுத்துத் தேர்வில் வெற்றி பெற, இதுவும் முக்கியம்? யூஸ் பண்ணிக்கோங்க!!!

அவரை தொடர்ந்து இந்திய வீராங்கனையான கே.எம். தீக்சா 1,500 மீட்டர் ஆட்டத்தில் 4 நிமிடங்கள் 4.78 வினாடிகளில் பந்தய தூரத்தை எட்டி 3வது இடத்தைப் பிடித்துள்ளார். இதன் மூலம் சாதனை ஒன்றையும் படைத்துள்ளார். அதாவது இந்தியாவுக்காக கடந்த 2021ம் ஆண்டு ஹார்மிலன் பெய்ன்ஸ் 4 நிமிடங்கள் 5.39 வினாடிகளில் பந்தய தூரத்தை கடந்து படைத்திருந்த தேசிய சாதனையை தீக்சா முறியடித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Enewz Tamil WhatsApp Channel 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here