Wednesday, May 8, 2024

மனமனக்கும் மீன் பிரியாணி ரெசிபி – வீக் எண்ட் ஸ்பெஷல்!!

Must Read

இன்னைக்கு வீக் எண்டு ஸ்பெஷல் ஆக “பிஷ் பிரியாணி”. மீன் வகைகளில் சிலர் மிகவும் விரும்பி சாப்பிடுவர். அவர்களுக்கு என்று ஸ்பெஷல் ரெசிபி இதோ..

தேவையான பொருட்கள்:

  • வஞ்சரம் மீன் – அரை கிலோ
  • பிரியாணி இலை – 1
  • பட்டை – 1
  • கிராம்பு – 1
  • சோம்பு – 10 கிராம்
  • ஏலக்காய் – 3
  • இஞ்சி, பூண்டு விழுது – 2 டீஸ்பூன்
  • பச்சமிளகாய் – 2
  • காய்ந்த மிளகாய் – 2
  • துருவிய தேங்காய் – 2 டீஸ்பூன்
  • வெங்காயம் – 2
  • தக்காளி – 3
  • தனியா தூள் – 2 டீஸ்பூன்
  • பாசுமதி அரிசி – அரை கிலோ
  • புதினா இலை – கொஞ்சம்
  • கொத்தமல்லி இலை – கொஞ்சம்
  • தேங்காய் பால் – அரை கப்
  • உப்பு – தேவையான அளவு
  • எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை:

  • முதலில், மசால் செய்ய மிக்ஸியில், இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய், துருவிய தேங்காய் போட்டு நன்றாக விழுதாக அரைக்கவும். அதில் வேண்டும் என்றால் தண்ணீர் ஊற்றி அரைத்து கொள்ளவும்.
  • குக்கரை காயவைத்து, எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பிரியாணி இலை, பட்டை, கிராம்பு, ஏலக்காய் மற்றும் வெங்காயம் போட்டு நன்றாக வதக்கவும்.
  • பச்சை வாசனை போனதும், இதில் அரைத்த விழுதை மற்றும் தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும்.
  • இதில் மெதுவாக மீன் துண்டுகளை சேர்த்து கிளறவும். மீன் துண்டுகளை கிண்டும் போது கவனமாக இருக்கவும்.
  • பின்பு, இதில் அரிசியை சேர்த்து, தேங்காய் பால், தண்ணீர் ஊற்றி ஒரு 2 விசில் வந்ததும், எடுத்து விடவும்.
சூப்பரான “‘ பிஷ் பிரியாணி” ரெடி!!
- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

தமிழகத்தில் 12 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை., இன்னும் சில மணி நேரங்களில்? வெளியான முக்கிய தகவல்!!!

தமிழகத்தில் கோடை வெயில் கொளுத்தி வரும் நிலையில், வளிமண்டல கீழடுக்கில் காற்றின் திசை மாறுபாடு ஏற்பட்டு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக்...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -