Sunday, May 5, 2024

சேட்ஸ், வீடியோக்களை இழக்காமல் புதிய நம்பரை மாற்றலாம் – வாட்ஸ் ஆப்பில் புதிய ஆப்ஷன்!!

Must Read

உலகளவில் பல பயனர்களை கொண்டுள்ள ஒரு செயலி தான் “வாட்ஸ் ஆப்” இந்த செயலியின் நிறுவனம் பயனர்களின் தேவைகளை அறிந்து பல அம்சங்களை தொடர்ந்து வழங்கி வருகின்றன. அந்த வகையில் தற்போது உங்கள் வாட்ஸ் ஆப் சாட்ஸ், டேட்டா போன்ற எதனையும் அழிக்காமல் புதிய நம்பரை மாற்றிக்கொள்ளும் அம்சத்தினை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

“வாட்ஸ் ஆப்”

இன்றைய அவசரமான உலகில் நம்மில் யாருக்கும் நின்று ஒருவரிடம் பேச கூட நேரம் இருப்பதில்லை. இதனால் ஒரு கட்டத்தில் அனைவரும் தனிமையினை உணர ஆரம்பிப்போம். இதற்கு எப்போது வேண்டுமாலும் நாம் பேச விரும்பியவரிடம் தொடர்பில் இருப்பதற்காகவே நவீனமயமான செயலிகள் அறிமுகப்படுத்தப்பட்டன. அதில் உலகளவில் பலரும் பயன்படுத்துவது “வாட்ஸ் ஆப்” இது ஒரு பாதுகாப்பான அதே சமயம் பயனர்கள் எளிதாக பயன்படுத்த கூடிய அம்சங்களை கொண்டுள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

“வாட்ஸ் ஆப்” செயலியினை வடிவமைத்து இயக்கி வரும் நிறுவனம் தற்போது பயனர்களின் வசதிக்காக மேலும் ஒரு புதிய அம்சத்தினை வழங்கியுள்ளது. இந்த அம்சம் இருப்பது பலருக்கும் தெரியாது. அது என்னவென்றால், நாம் அனைவரும் ஒரு சில காலம் வரை தான் ஒரு நம்பரை பயன்படுத்துவோம். பின், அதனை மாற்ற வேண்டிய கட்டாயமோ அல்லது சூழலோ ஏற்படும்.

புதிதான அம்சம்:

இதனை தவிர்க்க இயலாது. நாம் அனைவரும் வாட்ஸ் ஆப்பில் ஒரு நம்பரை மட்டுமே பயன்படுத்த முடியும் என்றும் நம்பரை மாற்றினால் வாட்ஸ் ஆப்பில் பெறப்பட்ட வீடியோ, போட்டோஸ், சாட்ஸ் மற்றும் இதர டேட்டா அழிந்து விடும் என்றே நினைத்திருப்போம். ஆனால், அது தான் இல்லை. பழைய சாட்களையோ, டேட்டாக்களையோ அழிக்காமல் நம்பரை நம்மால் மாற்ற இயலும். இந்த அம்சம் iOS மற்றும் Android கொண்டுள்ள அனைத்து பயனர்களும் பயன்படுத்திக்கொள்ளலாம்.

ஈஸி ஸ்டெப்ஸ்:
  • முதலில் உங்கள் வாட்ஸ் ஆப்பிற்குள் நுழைந்து, அதில் செட்டிங்ஸ் மெனுவிற்குள் சென்று அக்கௌன்ட் விருப்பத்திற்குள் நுழையவும்.
  • அக்கௌன்ட் விருப்பத்திற்கும் சென்றதும் பல ஆஃஷன்கள் இருக்கும். அதில், change number என்று ஒரு விருப்பம் இருக்கும்.
  • அதனை தேர்வு செய்து உங்கள் புதிய மொபைல் நம்பரை பதிவிடவும்.
  • வாட்ஸ் ஆப் உங்கள் புதிய நம்பரை சரிபார்த்து அதனை மாற்றி விடும். இதோடு ஸ்டெப்ஸ் ஓவர்!!

நீங்கள் இனி உங்கள் புதிய நம்பரில் இருந்து இனி வாட்ஸ் ஆப்பினை பயன்படுத்தலாம். சாட்ஸ், ஸ்டோரேஜ், வீடியோ மற்றும் போட்டோஸ் அப்படியே இருக்கும்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

PF சந்தாதாரர்களுக்கு ஜாக்பாட்., ரூ.50,000 வரையிலும் போனஸ் கிடைக்கும்? EPFO-வின் மாஸ் விதிகள்!!!

அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரியும் ஊழியர்களின் ஓய்வூதிய கால நலன் கருதி, மாதாந்திர ஊதியத்தில் PF தொகை பிடித்தம் செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு பிடித்தம்...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -