10 ஓவரில் 2 விக்கெட் இழப்பு – பேட்டிங்கில் தடுமாறும் இந்திய அணி!!

0

இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 2வது ஒருநாள் போட்டி சிட்னியில் நடைபெற்று வருகிறது. இதில் முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி 4 விக்கெட் இழப்பிற்கு 389 ரன்கள் குவித்தது. அதனை தொடர்ந்து 390 ரன்கள் என்ற கடின இலக்குடன் இறங்கிய இந்திய பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து விக்கெட்களை பறிகொடுத்து அதிர்ச்சி அளிக்கின்றனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

ஆஸ்திரேலியா அணிக்கு டேவிட் வார்னர், ஆரோன் பின்ச் ஜோடி அதிரடி துவக்கம் தந்தது. 77 பந்துகளில் 3 சிக்ஸர், 7 போர் உட்பட 83 ரன்கள் விளாசிய வார்னர் ரன் அவுட் ஆனார். மறுபக்கம் நிதானமாக விளையாடிய பின்ச் 69 பந்துகளில் 60 ரன்கள் அடித்த நிலையில் முகமத் ஷமி பந்தில் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார். முதல் போட்டியில் சதமடித்த ஸ்டீவ் ஸ்மித், இந்த போட்டியிலும் தனது அதிரடியை தொடர்ந்தார்.

Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

இந்திய பவுலர்களை பதம் பார்த்த ஸ்மித் நாலாபுறமும் பவுண்டரிகளை விளாசித் தள்ளினார். 64 பந்துகளில் 104 ரன்கள் குவித்த ஸ்மித் ஹர்திக் பாண்ட்யா பந்தில் வெளியேறினார். 50 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலியா அணி 4 விக்கெட் இழப்பிற்கு 389 ரன்கள் குவித்தது. மார்னஸ் 70 ரன்கள் அடித்திருந்த நிலையில் பும்ராஹ் பந்தில் அவுட் ஆனார். இறுதியில் ஹென்றியூஸ் (2), மேக்ஸ்வெல் (63) ரன்களுடன் களத்தில் இருந்தனர். இந்திய அணி தரப்பில் ஹர்திக் பாண்ட்யா, முகமத் ஷமி, பும்ராஹ் தலா 1 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இந்தியா பேட்டிங்:

390 ரன்கள் என்ற கடின இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு துவக்கம் சரியாக அமையவில்லை. மயங்க் அகர்வால் (28), ஷிகர் தவான் (30) அடுத்தடுத்து வெளியேறி அதிர்ச்சி அளித்தனர். இதனால் 12 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 2 விக்கெட்டை இழந்து பரிதாபமான நிலையில் உள்ளது.

12 ஓவர்கள் முடிவில் : 77 – 2, விராட் கோஹ்லி (5)
ஷ்ரேயாஸ் ஐயர் (12)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here