Monday, April 29, 2024

தல அஜித்தின் “வலிமை” ஓ.டி.டி ரிலீஸ் ஆ? – போனி கபூர் விளக்கம்..!

Must Read

கொரோனா பரவலால் பல படங்கள் முடிவு பெறாமல் கிடப்பில் உள்ளது, இதனால் “தல” அஜித்தின் வலிமை படம் ஓ.டி.டி இல் வெளியிடபடுமா என்ற கேள்விக்கு அந்த படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் விளக்கம் அளித்து உள்ளார்.

“வலிமை” படம்:

கடந்த 2019 ஆம் ஆண்டு ஆரம்பித்த இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் நிறைவு பெற வில்லை. இந்த படத்தில் “தல” அஜித், ஹேமா ஹருஷி போன்றோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். போனி கபூர் இந்த படத்தை தயாரிக்கிறார். இந்த படத்தை “தீரன் அதிகாரம் ஒன்று” பட இயக்குனர் வினோத் இயக்குகிறார்.

ajith kumar
ajith kumar

இன்னும் பல காட்சிகள் இந்த படத்தில் எடுக்கப்படவில்லை. பைக் ரேஸிங் காட்சிகளை வெளிநாடுகளில் நடத்த முடிவு செய்து இருந்தனர். ஆனால் அதை செய்ய முடியுமா என்று மிகுந்த குழப்பத்தில் உள்ளனர். கொரோனா வைரஸ் பரவலால் படம் அப்படியே நிலுவையில் உள்ளது.

ஓ.டி.டி ரிலீஸ்:

இந்த நிலையில், பல படங்கள் ஓ.டி.டி என்று சொல்லப்படும் ஆன்லைன் தளங்களில் ரிலீஸ் செய்ய படுகிறது. ஜோதிகாவின் “பொன்மகள் வந்தால்” , கீர்த்தி சுரேஷின் “பென்குவின் ” போன்ற படங்கள் வெளி வந்தது. அடுத்ததாக வரலட்சுமியின் “டேனி” படம்மும் வர இருக்கிறது. கூடுதலாக பாலிவுட்யின் முன்னனி நடிகர் ஆன அக்ஷய் குமாரின் “லட்சுமி பாம்” என்ற படம் ஓ.டி.டி இல் ரிலீஸ் ஆக உள்ளது.

தமிழ்நாட்டில் மீண்டும் முழு ஊரடங்கா..? – மாலை 6 மணிக்குமுதல்வர் உரை..!

ஆனால, தமிழ் திரையை பொறுத்த வரையில் முன்னணி நடிகர்கள் தங்கள் படம் திரைஅரங்குகளில் தான் ரிலீஸ் ஆக வேண்டும் என்று காத்து இருக்கின்றனர். விஜயின் “மாஸ்டர்” சூர்யாவின் “சூரரை போற்று” மேலும் தனுஷ், ஜெயம்ரவி போன்றவர்கள் படம் வெளியாகாமல் உள்ளது.

போனி கபூர் விளக்கம்:

இந்த நிலையில் அஜித் நடிக்கும் “வலிமை” ஆன்லைனில் வெளியிட படுமா என்பது தான். “தல” ரசிகர்கள் பலரும் இதனை வேண்டாம் என்று தான் நினைக்கின்றனர்.

boney kapoor
boney kapoor

ஏனென்றால், அஜித்தின் படம் கொண்டாட்டங்கள் இல்லாமல் பார்க்க யாரும் தயாராக இல்லை. அந்த படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் கூறியதாவது” கண்டிப்பாக அஜித்தின் “வலிமை” படம் திரையரங்கில் தான் வெளி வரும். லாக்டவுன் முடிந்ததும் வேகத்தில் படப்பிடிப்பு முடிந்து திரையரங்கில் வெளி .இடப்படும். ரசிகர்கள் ” தல” கேட்டு உள்ளார்.

இதன் மூலம் அஜித்தின் “வலிமை” படத்தை திரையரங்கில் எதிர்பார்க்கலாம்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

தமிழக இல்லத்தரசிகளே.., காய்கறிகளின் விலையில் அதிரடி மாற்றம்…, முழு விவரம்!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக காய்கறிகளின் விளைச்சல்களும் பாதிப்படைந்த நிலையில், அதன் விலை தாறுமாறாக உயர்ந்து வந்தது. ஆனால் இப்போது தினசரி சந்தைக்கு வரும் காய்கறிகளின்...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -