Friday, May 10, 2024

தமிழகம் & கேரளாவிற்கு “ரெட் அலெர்ட்” – டிசம்பர் 2 ஆம் தேதி அதிகனமழைக்கு வாய்ப்பு!!

Must Read

அந்தமான் மற்றும் அதனை ஒட்டியுள்ள கடல் பகுதிகளில் புதிதாக காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானதை அடுத்து தமிழகத்திற்கு வரும் டிசம்பர் 2 ஆம் தேதி “ரெட் அலெர்ட்” விடுக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 2 ஆம் தேதி தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் கனமழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய காற்றழுத்த தாழ்வு நிலை:

கடந்த சில மாதங்களாகவே தமிழகம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் பருவநிலை மாறி நல்ல கனமழை பெய்து வருகின்றது. கடந்த 25 ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக “நிவர்” புயல் தமிழகம், புதுச்சேரி மற்றும் பிற பகுதிகளை தாக்கியது. தற்போது மேலும் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு நிலை வங்கக்கடல் மற்றும் அந்தமான் பகுதிகளில் உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

வங்கக்கடலில் மேற்கு திசையில் இந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதாகவும் இந்த காற்றழுத்த தாழ்வு நிலை இன்னும் சில நாட்களில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகும் என்றும் கூறப்பட்டுள்ளது. கூடுதலாக, இந்த காற்றழுத்த தாழ்வு நிலை புயலாகவும் உருவாகக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்திற்கு “ரெட் அலெர்ட்”

இந்த மாற்றத்தால் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் வரும் டிசம்பர் 2 ஆம் தேதி மிக அதிகமாக கனமழை பெய்ய கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதன் காரணமாக தற்போது தமிழகம் மற்றும் கேரள மாநிலங்களுக்கு “ரெட் அலெர்ட்” கொடுக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 2வது ஒருநாள் போட்டி – திணறும் இந்திய பவுலர்கள்!!

நாளை தென்தமிழக மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் மிதமானது முதல் லேசான மழை பெய்யும் என்றும் கூறப்பட்டுள்ளது. அதே போல் டிசம்பர் 1 ஆம் தேதி தமிழகத்தில் உள்ள தென்மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 2 ஆம் தேதி தமிழகம் மற்றும் கேரளாவில் மிக அதிகமான கனமழை பெய்யும் என்று கூறப்பட்டுள்ளது.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

தமிழகத்தில் நாய் வளர்ப்பவர்களுக்கான கட்டுப்பாடு., அரசு அதிரடி உத்தரவு!!!

சென்னையில் பூங்கா ஒன்றில் விளையாடிக் கொண்டிருந்த 5 வயது சிறுமியை, ராட்வீலர் வகையை சேர்ந்த  2 நாய் கடித்து குதறியது. இதில் பலத்த காயமடைந்த சிறுமிக்கு,...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -