ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 2வது ஒருநாள் போட்டி – திணறும் இந்திய பவுலர்கள்!!

0

இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 2வது ஒருநாள் போட்டி இன்று சிட்னியில் தொடங்கி உள்ளது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா கேப்டன் ஆரோன் பின்ச் முதலில் பேட்டிங் செய்ய முடிவெடுத்துள்ளார். முதல் போட்டியில் 66 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்த இந்திய அணி 0-1 என்ற கணக்கில் பின்தங்கி உள்ளது. 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இன்றைய போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி உள்ளது.

2வது ஒருநாள் போட்டி:

இன்றைய போட்டியில் இந்திய அணியில் எவ்வித மாற்றங்களும் செய்யப்படவில்லை. ஆஸ்திரேலியா அணியில் ஸ்டோனிஸ்க்கு பதிலாக ஹென்றிக்ஸ் சேர்க்கப்பட்டு உள்ளார். முந்தைய போட்டியில் இந்திய பவுலர்கள் விக்கெட் எடுக்க முடியாமல் தடுமாறியது இன்றைய போட்டியிலும் தொடர்கிறது. தற்போதைய நிலவரப்படி ஆஸ்திரேலியா அணி 14 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 93 ரன்கள் குவித்துள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

ஓப்பனிங் பேட்ஸ்மேன்கள் டேவிட் வார்னர் (54), ஆரோன் பின்ச் (35) ரன்களுடன் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். முதல் போட்டியில் பவுலிங்கில் சொதப்பிய நவதீப் சைனிக்கு பதிலாக தமிழக வீரர் நடராஜனை சேர்க்குமாறு பலரும் கோரி வந்த நிலையில், இந்திய அணியில் எவ்வித மாற்றமும் செய்யப்படாமல் உள்ளது.

விளையாடும் 11 அணி:

இந்தியா – ஷிகர் தவான், மாயங்க் அகர்வால், விராட் கோலி (c), ஸ்ரேயாஸ் ஐயர், கே.எல்.ராகுல் (wk), ஹர்திக் பாண்ட்யா, ரவீந்திர ஜடேஜா, நவ்தீப் சைனி, முகமது ஷமி, ஜஸ்பிரீத் பும்ரா, யூஸ்வேந்திர சாஹல்

ஆஸ்திரேலியா – ஆரோன் பிஞ்ச் (c), டேவிட் வார்னர், ஸ்டீவன் ஸ்மித், மார்னஸ் லாபுசாக்னே, க்ளென் மேக்ஸ்வெல், மொய்சஸ் ஹென்ரிக்ஸ், அலெக்ஸ் கேரி (wk), பாட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஜாம்பா, ஜோஷ் ஹேசில்வுட்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here