Monday, May 20, 2024

சுவையான சிக்கன் ‘நெய் ரோஸ்ட்’ ரெசிபி – வீட்டுல செஞ்சு அசத்துங்க!!

Must Read

சிக்கன் என்றாலே அனைவர்க்கும் விருப்பமான உணவு என்றே சொல்லலாம். எந்த வகையில் சிக்கன் செய்தாலும் அதன் சுவை அருமையாக இருக்கும். புரட்டாசி வேறு இன்றோடு முடிவடைவதால் நாளைக்கு இந்த சிக்கன் ரோஸ்ட் ரெசிபியை செஞ்சு அசத்துங்க.

தேவையான பொருட்கள்

chicken ingredients

சிக்கன் – 1/ 2 கி

வெங்காயம் – 2

வர மிளகாய் – 8

மல்லி – 1 தேக்கரண்டி

பூண்டு

சீரகம் – 1 தேக்கரண்டி

பட்டை, கிராம்பு

மிளகு

செய்முறை

முதலில் கடாயில் நெய் ஊற்றி அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்க்கவும். அதில் மஞ்சள்தூள் சேர்த்து வதக்கி சிக்கனையும் சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு மற்றொரு கடாயில் எண்ணெய் ஊற்றாமல் மல்லி, வரமிளகாய், சீரகம், மிளகு, பட்டை, கிராம்பு போன்றவற்றை வதக்கி எடுத்து அதில் பூண்டு சேர்த்து அதனை மிக்ஸியில் போட்டு அரைத்து எடுத்துக்கொள்ளவும்.

chicken ghee roast
chicken ghee roast

இதனை தற்போது வதங்கி கொண்டிருக்கும் சிக்கனில் போட்டு நன்கு வதக்கி 15 நிமிடங்கள் மூடி வைத்து கொத்தமல்லி தூவி இறக்கினால் சுவையான சிக்கன் நெய் ரோஸ்ட் தயார்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

UG நீட் தேர்வர்களே., தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்? உச்ச நீதிமன்றம் வெளியிட்ட அறிவிப்பு!!!

நாடு முழுவதும் இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு, கடந்த மே 5ஆம் தேதி நடத்தப்பட்டது. இந்த தேர்வை 557 நகரங்களில் லட்சக்கணக்கான மாணவ...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -