Friday, April 26, 2024

வாழ்வில் நீங்கள் பெற கூடாத மூன்று சாபங்கள்?? ஆன்மீக விளக்கம்!!

Must Read

நமது வாழ்க்கையில் தெரிந்தோ தெரியாமலோ பல பாவங்களை நாம் செய்து விடுகிறோம். தெரியாமல் செய்யும் பாவத்திற்கு சாஸ்த்திரத்தில் மன்னிப்பு உண்டு ஆனால் தெரிந்தே செய்யும் பாவங்களுக்கு மன்னிப்பு என்பது கிடையாது. மேலும் சில சாபங்களை பெற கூடாது என்று நம் முன்னோர்கள் கூறியுள்ளனர். அதை பற்றி இந்த பதிவில் காண்போம்.

சாபங்கள்

முன்னோர்களால் வர கூடிய சாபங்கள் நாம் அடுத்த பிறவிகள் வரை தொடரும். அதனால் தான் நாம் வாழும் நாட்களில் எந்த தீங்குகளையும் செய்யாமல் பிறருக்கு முடிந்த வரையிலும் உதவிகளை செய்து வர வேண்டும். சசத்திரங்கள் படி குறிப்பிட்ட சில சாபங்களை மட்டும் நாம் பெறவே கூடாது. இதற்கு ஆன்மீக ரீதியாக பரிகாரங்கள் இருந்தாலும் அவை நிரந்தரமாக இருக்காது.

sin
sin

அதாவது இந்த சாபங்கள் நமது வாழ்நாளை துன்பமாக மாற்றி விடும். நமது கடமையை ஒழுங்காக செய்யாமல் ஏமாற்றுவது, பிறரை ஏமாற்றி துன்புறுத்தி வாழ்வது இதனால் அவர்கள் துன்பப்பட்டு சாபம் விட்டாலே போதும். அது நம் வாழ்க்கையையே அழித்து விடும். அவர்கள் உங்களை பழிக்கு பழி வாங்கினால் கூட அந்த சாபம் நிற்காது. ஆனால் அவர்களால் எதுவும் செய்ய முடியாமல் போகும்போது அது பெரும் சாபமாக மாறுகிறது.

முதலில் பெற்றோர்கள் சாபம் என்பது மிகவும் கொடுமையானது. அவர்களை மதிக்காமல் கடைசி காலத்தில் பார்த்துக்கொள்ளாமல் இருப்பது மிகவும் தவறான ஒன்று. இதனை செய்யும் போது அவர்கள் சாபம் விடாமலே அந்த சாபத்தை நாம் பெறுகிறோம். இதனை நீங்கள் தெரியாமல் செய்திருந்தால் கூட சண்டிகேஸ்வரர் ஆலயத்திற்கு சென்று அவரின் முன்பு தியானத்தில் ஈடுபட்டால் கட்டாயமாக சாப விமோச்சனம் கிடைக்கும்.

sandikeswarar
sandikeswarar

மேலும் பெண் சாபம் என்பது ஏழு தலைமுறைக்கும் தொடர கூடியது. ஒரு பெண்ணிற்கு நாம் இளைக்கும் தவறோ அல்லது துரோகமோ அவர்களின் பரம்பரையையே சீரழித்து விடும். எனவே ஒரு பெண்ணிடம் எந்த சாபங்களையும் பெற கூடாது. இந்த பெண் சாபத்தில் இருந்து விடுபட நந்தி பகவானை வணங்கி வந்தால் நல்ல பலனை பெறலாம்.

nandhi-2
nandhi

அடுத்ததாக சகோதரர்கள் சாபம். உங்கள் உடன் பிறந்தவர்களுக்கு துரோகம் செய்தாலோ அல்லது அவர்களிடம் இருந்து சொத்துக்களை அபகரித்தாலோ கட்டாயமாக நாம் அந்த சாபத்திற்கு ஆளாக வேண்டும். இந்த சாபம் நீங்க அஷ்டமி திதியில் பைரவருக்கு விளக்கேற்றி வந்தால் இந்த சாபத்தில் இருந்து விடுபடலாம். ஆனால் திரும்பவும் ஆரம்பித்தால் கண்டிப்பாக சாப விமோட்சனம் கிடைக்காது.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

CSK அணியின் அடுத்த போட்டி எப்போது?? எந்த அணியுடன்? முழு விவரம் உள்ளே!!

IPL தொடரின் 17 வது சீசன் கடந்த மார்ச் 22 ஆம் தேதி முதல் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -