Wednesday, May 8, 2024

புதிய வெர்ஷன் “ஹோண்டா ஆக்ட்டிவா 6 ஜி” – ஹோண்டா நிறுவனம் அறிமுகம்!!

Must Read

இந்தியாவில் ஹோண்டா நிறுவனம் கடந்த பல ஆண்டுகளாக வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது. ஹோண்டா நிறுவனத்தால் இருபாலரும் பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டது தான் இந்த ஹோண்டா ஆக்ட்டிவா. தற்போது ஹோண்டா நிறுவனம் ஆக்ட்டிவா 6ஜி என்ற புதிய வெர்ஷனை அறிமுகம் செய்துள்ளது.

புதிய வெர்ஷன் அறிமுகம்

இந்தியாவின் ஹோண்டா இருசக்கர வாகனத்தின் இயக்குநர் அட்சுசி ஒகாடா, ஹோண்டா ஆக்ட்டிவா 6 ஜி இருசக்கர வாகன புதிய வெர்ஷனை அறிமுகம் செய்துள்ளார். இந்த ஆக்ட்டிவா 6 ஜி வருவதற்கு முன்பே சில ஹோண்டா ஆக்ட்டிவா என்ற இருசக்கர வாகனத்தை அறிமுகம் செய்தது. ஹோண்டா ஆக்ட்டிவா பார்ப்பதற்கு ஸ்கூட்டர் போன்ற அமைப்பில் இருக்கும். இதில் கியர் மாற்ற தேவையில்லை, பெரிய சீட் வசதி, முன்னாடி பொருட்களை வைப்பதற்கு ஏற்ப இடம் மற்றும் ஸெல்ப் ஸ்டார்ட், பிக்கப் போன்றவை அமைக்கப்பட்டு இருக்கும்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

honda-activa-6g
honda-activa-6g

இந்த இருசக்கர வாகனத்தை ஆண், பெண் என்ற இருபாலரும் உபயோகிக்கும் வகையில் தான் ஹோண்டா நிறுவனம் அறிமுகம் செய்தது. இந்த ஹோண்டா ஆக்ட்டிவா ஆரம்பித்து கடந்த 20 ஆண்டுகள் ஆகிவிட்டன. கடந்த 20 ஆண்டுகளும் மக்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பு மற்றும் நம்பிக்கையை பெற்று வருகிறது. அதனை கொண்டாடும் விதமாக ஹோண்டா நிறுவனம் ஹோண்டா ஆக்ட்டிவா 6 ஜி என்ற புதிய வெர்ஷனை அறிமுகம் செய்துள்ளது.

சிறப்பு அம்சங்கள்

ஹோண்டா நிறுவனம் அறிமுகப்படுத்திய ஹோண்டா ஆக்ட்டிவா 6 ஜியின் சிறப்பு அம்சம் 109.5 சிசி எஞ்சின் கெபாசிட்டி, 7.68 பிஎச்பீ மற்றும் 8000 ஆர்பிஎம் பவர், செல்ஃப் மற்றும் கிக்ஸ்டார்ட், 45 கேஎம்பிஎல் மைலேஜ் மற்றும் புதிய பெயிண்ட் ஃபினிஷிங் போன்ற சிறப்பு அம்சங்களை இந்த ஹோண்டா ஆக்ட்டிவாவில் 6 ஜி பெற்று உள்ளது.

Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

honda activa 6 g engine
honda activa 6 g engine

இதன் விலை எக்ஸ்-ஷோரூமில் ரூ. 66,316 முதல் 68,316 வரை இருக்கும். ஆனால் இந்த ஹோண்டா ஆக்ட்டிவா 6 ஜி கைக்கு வரும்பொழுது ரூ.70,000 வரை விற்பனை செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இதன் விலை பெயிண்ட் ஸ்டைலுக்கு ஏற்ப மாறுபடும் என்று ஹோண்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

நான் யாருக்கும் நிரூபிக்கணும்னு அவசியம் இல்லை.. சமந்தா கொடுத்த பதிலடி.. முழு விவரம் உள்ளே!!

இந்திய திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக ஜொலித்து கொண்டிருப்பவர் தான் நடிகை சமந்தா. தற்போது இவர் வெப் தொடரில் நடித்து வருகிறார். இந்த நிலையில் சில...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -