Sunday, April 28, 2024

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி – நவ.30ல் தமிழகத்தில் புயல் வீச வாய்ப்பு!!

Must Read

தென்கிழக்கு வங்கக்கடலில் அடுத்த 48 மணிநேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்று தெரிவித்துள்ளார், வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்தின்.  இதனால் வரும் நவ 30.ஆம் தேதி தமிழகத்தை நோக்கி புயல் நகரும். இதனால் வரும் டிச.1 முதல் 3 ஆம் தேதி வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

வானிலை மையம் தகவல்

சென்னை வானிலை மையம் ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன், அடுத்த 48 மணிநேரத்தில் தென்கிழக்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளது. உருவான சில மணிநேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற அதிக வாய்ப்புள்ளது. ஆகையால் அடுத்த 2 நாட்களில் புயலாக தமிழகத்தை நோக்கி நகரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் அறிவித்துள்ளது.

Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

இந்த புயலின் காரணமாக தமிழகத்தில் வரும் டிசம்பர் 1 ஆம் தேதி முதல் 3 ஆம் தேதி வரை பரவலாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. தற்போது காரைக்கால் மற்றும் மாமல்லபுரம் இடையே கரையை கடந்த நிவர் புயல் ஆந்திரா நோக்கி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலவி வருகிறது என்று வானிலை ஆய்வு மைய இயங்குநர் தெரிவித்துள்ளார்.

மழை நிலவரம்

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியால் அடுத்த 24 மணிநேரத்தில் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய இடங்களில் மீண்டும் மழைக்கு வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பொதுவாக வடகிழக்கு பருவமழை காலத்தில் சராசரியாக 34 செ.மீ மழைபெய்ய வேண்டும்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

rain in tamilnadu
rain in tamilnadu

ஆனால் இந்த ஆண்டு 29 செ.மீ மட்டுமே மழை பெய்துள்ளது. தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக 23 செ.மீ மழை ராணிப்பேட்டை மாவட்டத்தில் பெய்துள்ளது.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

2024 மே மாதத்திற்கான வங்கி விடுமுறை பட்டியல் வெளியீடு., எவ்ளோ நாட்கள் தெரியுமா? முழு விவரம் உள்ளே!!!

பொதுத்துறை மற்றும் தனியார் துறை வங்கி நிறுவனங்கள், வாடிக்கையாளர்களின் நலன் கருதி பல்வேறு டிஜிட்டல் வசதிகளை அறிமுகம் செய்து வருகின்றனர். ஆனாலும் இன்னும் ஒரு சில...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -