Monday, April 29, 2024

நிவரை அடுத்து தமிழகத்தை தாக்க வரும் ‘புரெவி புயல்’ – வானிலை மையம் எச்சரிக்கை!!

Must Read

தென்கிழக்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளது. ஆகையால் தமிழகத்தில் அடுத்த 24 மணிநேரத்தில் இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தமிழக கடலோர பகுதி நோக்கி நகரும் என்றும் தகவல் தெரிவித்துள்ளனர்.

வானிலை ஆய்வு மையம்:

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நிவர் =புயல் கரையை கடந்த பிறகு புதியதாக தென்கிழக்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று உருவாகியுள்ளது. இந்த குறைந்த காற்றழுத்தம் ஞாயிறு அன்று உருவாகும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்திருந்தது. ஆனால் அதற்கு முன்னதாகவே இன்று அதிகாலை பொழுதில் வந்தடைந்தது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

regional metheorological center
regional metheorological center

இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று உருவாகிய நிலையில் அடுத்த 24 மணிநேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆகையால் அடுத்த சில நாட்களில் தமிழக கடலோர பகுதியை நோக்கி நகரும் என்றும் தெரிவித்துள்ளனர். அதனை அடுத்து தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் டிசம்பர் 1 ஆம் தேதி முதல் 3ஆம் தேதி வரை பரவலாக மழைபெய்ய வாய்ப்புள்ளதாகவும் தகவல் தெரிவித்துள்ளனர்.

அதிதீவிர மழைக்கு வாய்ப்பு  

தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து தமிழகம் மற்றும் புதுச்சேரி கடற்கரை நோக்கி நகரும் போது ஒரு சில இடங்களில் வரும் டிச.2 மற்றும் 3 ஆம் தேதி அதிதீவிர கனமழை பெய்ய வாய்ப்புள்ளத்தாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

rain
rain

மேலும் இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து புயலாக மாறினால் அந்த புயலுக்கு மாலத்தீவு வழங்கப்பட்ட “புரெவி” என்று பெயர் வைக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

மீனவர்களுக்கு எச்சரிக்கை:

தென்கிழக்கு வங்கக்கடல், அந்தமான் நிக்கோபார் தீவு ஆகிய கடலோர பகுதியில் மணிக்கு 45 கி.மீ முதல் 65 கி.மீ வேகத்தில் பலத்த சூறாவளி காற்று வீசக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

fisherman not allowed intothe sea
fisherman not allowed intothe sea

இதனால் தமிழக கடலோரப் பகுதி, தென்கடலோர ஆந்திரா பகுதி, மன்னர் வளைகுடா மற்றும் குமரிக்கடலோர பகுதியில் உள்ள மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டு உள்ளது.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

செப் தாமு vs வெங்கட் பட்.., இவர்களுக்கு இடையே இருக்கும் சீக்ரட்.., முழு ஆதரவும் இவருக்கு தான்!!

விஜய் டிவியில் முக்கிய நிகழ்ச்சியாக கருதப்படும் குக் வித் கோமாளி சீசன் 5 இனிதே தொடங்கிய நிலையில், முக்கிய பிரபலங்கள் சிலர் கலந்து கொள்ளாதது பலரையும்...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -